தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

ராயபுரம் மாடல் லைன் பகுதி மக்களுக்கு பட்டா ! சிபிஎம் தொடர் போராட்டம் வெற்றி

3 Jan 2026, 4:57 pm
ராயபுரம்  மாடல்  லைன்  பகுதி  மக்களுக்கு  பட்டா ! சிபிஎம் தொடர் போராட்டம் வெற்றி
<p><strong>ராயபுரம் &nbsp;மாடல் &nbsp;லைன் &nbsp;பகுதி &nbsp;மக்களுக்கு &nbsp;பட்டா ! சிபிஎம் தொடர் போராட்டம் வெற்றி</strong></p> <p>சென்னை, ஜன. 3- ராயபுரம் 52ஆவது வட்டம் மாடல் &nbsp;லைன் பகுதியில் வசிக்கும் மக்க ளுக்கு சனிக்கிழமை (ஜன. 3) பட்டா வழங்கப்பட்டது. எங்களுக்காக கம்யூனிஸ்ட் கட்சியினர் தொடர்ந்து போராடினார்கள் என்று மக்கள் பெரு மிதத்துடன் கூறினர். ராயபுரம் 52ஆவது வட்டம் மாடல் லைன் பகுதியில் சுமார் 450க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பல தலை முறைகளாக வசித்து வருகின்றனர். இந்த இடம் சென்னை மாநக ராட்சிக்கு சொந்தமான இடம். அந்த பகுதி மக்களுக்கு பட்டா கேட்டு சிபிஎம் சார்பில் தொடர் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. சட்டமன்ற உறுப்பினரை சந்தித்து பலமுறை வலியுறுத்தப்பட்டது. இந்நிலையில் அந்த பகுதியில் வசிக்கும் 236 குடும்பத்திற்கு பட்டா வழங்கப்பட்டது. இதில் சட்டமன்ற உறுப்பினர் ஐட்ரீம் மூர்த்தி, வட சென்னை மக்களவை உறுப்பினர் கலாநிதி வீராசாமி ஆகியோர் கலந்து &nbsp;கொண்டு பட்டாவை வழங்கினர். சட்டமன்ற உறுப்பினர் பேசுகையில், விடுபட்ட 164 குடும்பத்திற்கும், அதே போல் போஜராஜன் நகர், சீனிவாச புரம் பகுதிகளில் வசிக்கும் குடும்பத் தினருக்கும் வரும் ஜனவரி 31ஆம் தேதிக்குள் பட்டா வழங்கப்படும் என்றார். தங்களின் வாழ்விடம் உறுதி &nbsp;செய்யப்பட்டதையடுத்து அனை வரின் முகத்தில் நிம்மதியும், புன்ன கையும் மேலோங்கி இருந்தது. இதில் தண்டையார்பேட்டை வட்டாட்சியர் கவிதா, மாவட்டச் செயலாளர், சட்ட மன்ற உறுப்பினர் ஆர்.டி.சேகர், பகுதி செயலாளர்கள் வ.பெ.சுரேஷ், இரா.செந்தில்குமார், சிபிஎம் &nbsp;பகுதிச் செயலாளர் எஸ்.பவானி, நிர்வாகி கள் டி.வெங்கட், எம்.அண்ணா மலை, எம்.ஜாவித் பாஷா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதுகுறித்து மாடல் லைன் பகுதி யில் வசிக்கும் எஸ்.ஆறுமுகம் கூறு கையில், நாங்கள் இங்கு 50 ஆண்டு களுக்கும் மேலாக வசித்து வரு கிறோம். 50 பைசா வரி விதித்த காலத்தில் இருந்து வரி செலுத்தியி ருக்கிறோம். கிராம சங்க நிர்வாகி கள் வரி கேட்டு சென்ற போது 1977 ஆம் ஆண்டு 10 ஆயிரம் ரூபாய் செலுத்தினால் பட்டா வழங்கு கிறோம் என்றனர். மீண்டும் 1988ஆம் ஆண்டு 52 ஆயிரம் ரூபாய் செலுத்தி னால் பட்டா வழங்குகிறோம் என்ற னர். ஆனால் இங்கு வசிப்பவர்கள் அன்றாடம் கூலி வேலை செய்து பிழைப்பை நடத்தக் கூடியவர்கள். எங்களால் இவ்வளவு தொகை செலுத்த முடியாது. எங்களுக்கு இல வச பட்டா தான் வேண்டும் என்று கூறினோம். 2008ஆம் ஆண்டு முதல் மார்க்சிஸ்ட் கட்சி தலைமையில் பட்டா கேட்டு தொடர்ந்து போராடி வருகிறோம். 2011ஆம் ஆண்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பட்டா கேட்டு மனு அளித்தோம். கடந்த டிசம்பர் 16ஆம் தேதி நடை பெற்ற மனு கொடுக்கும் இயக்கத் திலும் கலந்து கொண்டு மனு அளித்தோம். இந்நிலையில் தற்போது பட்டா கிடைத்துள்ளது. பட்டா வழங்கிய தமிழ்நாடு அரசுக்கும், பட்டா கிடைக்க நடவடிக்கை எடுத்த சட்ட மன்ற உறுப்பினருக்கும், எங்களுக் காக தொடர்ந்து போராடிய கம்யூ னிஸ்ட் கட்சிக்கும் எங்கள் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் என்றார். எம்.அமுதா கூறுகையில், நாங்கள் 70 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வருகிறோம். தற்போது எங்களுக்கு பட்டா கிடைத்திருப்பது எங்களின் நீண்ட நாள் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றியாகும். இனிமேல் சொந்த நிலத்தில் நிம்மதியாக உறங்கு வோம் என்று கூறினார். குடும்பத்தலைவி ஜி.தேவி கூறுகையில், நாங்கள் 3 தலைமுறை களாக இங்கு வசித்து வருகிறோம். இங்கு வசிப்பவர்களுக்கு பட்டா &nbsp;வழங்க வேண்டும் என்று கம்யூ னிஸ்ட் கட்சி தலைமையில் தொடர்ந்து மனு அளித்து போராடி வந்தோம். இப்போது எங்களுக்கு பட்டா வழங்கப்பட்டுள்ளது என்றார். &nbsp; இதுகுறித்து சிபிஎம் பகுதிச் செய லாளர் எஸ்.பவானி கூறுகையில், ராயபுரம் பகுதியில் வசிக்கும் மக்க ளுக்கு பட்டா கேட்டு 2008ஆம் ஆண்டு &nbsp;முதல் தொடர்ச்சியாக போராடி வரு கிறோம். &nbsp;கடந்த 18 ஆண்டுகளாக மாவட்ட ஆட்சியர், வருவாய் கோட் டாட்சியர், சட்ட மன்ற உறுப்பினர் என தொடர்ச்சியாக மனு அளித்து முறை யிட்டு வந்தோம். &nbsp;அதனடிப்படையில் 236 &nbsp;குடும்பத்திற்கு பட்டா வழங்கப்பட் டுள்ளது. மீதமுள்ள 164 குடும்பங்க ளுக்கும் இந்த மாத இறுதிக்குள் பட்டா வழங்கப்படும் என்று தெரி விக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு முதல மைச்சருக்கும், துணை முதலமைச் சருக்கும், தொடர் முயற்சி எடுத்த சட்ட மன்ற உறுப்பினருக்கும் எங்கள் கட்சி யின் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். அதேநேரம் இதில் ஒரு 50 குடும்பங்கள் விடுபட்டுள்ளன. அதையும் ஆய்வு செய்து பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.</p> <p>&nbsp;</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.