முந்தய பக்கம்

ஆணாதிக்கமும் வரதட்சணைக் கொடுமையும்

6 Dec 2025, 6:20 pm
ஆணாதிக்கமும் வரதட்சணைக் கொடுமையும்
<p><strong>ஆணாதிக்கமும் வரதட்சணைக் கொடுமையும்</strong></p> <p>மானுடராய்ப் பிறப்பது அரிது &ndash; அதில் பெண்ணாய்ப் பிறக்கும் போதே கூடவே பிறக்குது சகுனியாய் வரதட்சணை சிந்தனையும் &nbsp;முதலாளித்துவ சமூகத்தில் வரதட்சணைக் கொடுமை வீடுதவறாமல் நிலைப்படியாய் இருக்கின்றது ஆணாதிக்கம் &nbsp;விண்ணிற்குச் சென்று வந்த முதல்பெண் கல்பனா என்றாலும் சுருட்டு சுத்தும் சுதந்திரதேவியானாலும் வரதட்சணைக் கொடுமை விரட்டுது &nbsp;கல்யாணத்திற்கு முன் ஆயிரம் பொய் சொல்லி கட்டுவார் தாலியை பெண்வீட்டில் கறக்க திட்டம் போட மூணுமுடிச்சு அதில் ஏமாந்து போகுது மணப்பெண் &nbsp;கல்யாணம் கட்டிக் கிட்ட முதல் அழைப்பிலேயே ஆரம்பித்த ஆர்ப்பாட்டம் &ndash; அவள் வாழ்நாள் முதல் ஓயாது போராட்டம் &nbsp;குறைத்து போட்ட பவுன வாங்கிவர குடும்பமே ஒற்றை குரலாய் ஊதி எரியும் கொள்ளிக்கட்டை &nbsp;விரட்டுது வாழப்போன மகளை &nbsp;அரசு வேலைக்கு லஞ்சம் கொடுக்க &nbsp;ஐந்து , பத்து லட்சம்ரூபாய் பிறந்த வீட்டில் வாங்கி வர நிலைப்படியும் ஐந்து தலை நாகமாய் சீறிப் படமெடுத்தாடுது &nbsp;கொலை செய்யும் குற்றத்திற்கு ஆயுள் தண்டனை என பயந்து விஞ்ஞான முறையில் சிலிண்டர் &nbsp;வெடித்து சிதறிபோனாளே மகள் என வீடே ஒப்பாரி &nbsp;கணவன் கட்டிய தாலிக்கயிறு கழுத்தில் தொங்குது தூக்குக் கயிறாய் வாக்கப்பட்டு போன மாமியார்வீடு வழிகாட்டுது சுடுகாட்டிற்கு &nbsp;பசிக் கொடுமையை பொறுத்துக்கொள்ளும் மானுடம் வரதட்சணைக் கொடுமையை பொறுக்காது பிறந்த பெண் சிசுவுக்கு கொடுக்கும் சீம்பாலுக்கு- மாறாக கள்ளிப்பாலே சீம்பாலாகுது &nbsp;ஆணாதிக்கச் சிந்தனையின் உச்சக்கட்ட வரதட்சணையும் வஞ்சிக்கப்படும் பெண்ணினத்தையும் பாதுகாத்திட &nbsp;மனித குலத்திற்கு விழிப்புணர்வு ஏற்பட வீதி நாடகத்தாலும் தூரிகையாலுமே முடியும் என தமுஎகச நாளை கட்டியம் கூறும்! தஞ்சை கெ.அபிமன்னன்</p>
Share
FacebookXWhatsAppTelegram