அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் பற்றாக்குறை நோயாளிகள் அவதி: நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
6 Dec 2025, 2:48 pm
<p><strong>அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் பற்றாக்குறை நோயாளிகள் அவதி: நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்</strong></p>
<p>தருமபுரி, டிச.6- பாப்பிரெட்டிப்பட்டி அரசு மருத்துவ மனை தரம் உயர்த்தப்பட்டும், போதிய மருத்துவர்கள் நியமிக்கப்படாததால் நோயாளிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப் பட்டி அரசு மருத்துவமனை 1972 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கபபடடு, 1997 ஆம் ஆண்டில் 32 படுக்கை வசதிகள் கொண்ட மேம்படுத்தப்பட்ட தாலுகா மருத்துவமனையாக தரம் உயர்த்தப் பட்டது. தற்போது ரூ.5 கோடி செலவில் கூடுதலாக 30 படுக்கை அறைகள் கொண்ட புதிய கட்டிடம் கட்டப்பட்டுள் ளது. தினமும் 700க்கும் மேற்பட்ட புற நோயாளிகள் வந்து செல்கின்றனர். இந்த மருத்துவமனையில் பழைய நில வரப்படி 7 மருத்துவர்கள், 7 செவிலி யர்கள், 10 உதவியாளர்கள் என பணி புரிய அரசால் நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், 7 மருத்துவர்களில் ஆர்த்தோ, பிசியோதெரபி உள்ளிட்ட 5 பேர் மட் டுமே உள்ளனர். இந்த மருத்துவம னையை சார்ந்து சித்தேரி, மூக்காரெட்டிப் பட்டி, காளிப்பேட்டை, பையர்நத்தம், பொம்மிடி, பூதநத்தம், வத்தல்மலை என 7 அரசு ஆரம்ப சுகாதார நிலை யங்கள் உள்ளன. இங்கிருந்து கர்ப்பிணி கள் பிரசவம் மற்றும் அறுவை சிகிச்சை செய்ய பாப்பிரெட்டிப்பட்டி அரசு மருத் துவமனைக்கு வருகின்றனர். அறுவை சிகிச்சை அறை இருக்கிறது; அறுவை சிகிச்சை மருத்துவர்கள் இல்லை. பிரச வம் பார்க்கவும் மருத்துவர் இல்லை. இதனால் கர்ப்பிணிகள் பிரசவத்திற் காக தருமபுரி, சேலம் அரசு மருத்துவம னைகளுக்கு அனுப்பி வைக்கப்படு கின்றனர். கடந்த 30 ஆண்டுகளாக இதே நிலை நீடித்து வருகிறது. சில நேரங்களில் ஏற் காடு மலை கிராமங்களைச் சேர்ந்த மக் கள், இந்த மருத்துவமனையை நாடி வரு கின்றனர். அவ்வாறு வரும்போது மருத்துவர்கள் இல்லாத காரணத்தி னால் சேலம், தருமபுரி செல்லும் போது கர்ப்பிணிகள் உயிரிழக்கின்றனர். மகப் பேறு மருத்துவர், அறுவை சிகிச்சை நிபு ணர், மயக்க மருத்துவர், தோல் மருத்து வர், குழந்தைகள் மருத்துவர், விஷம் குடித்து வருபவர்களுக்கு சிகிச்சை அளிக்க எம்.டி., முடித்த மருத்துவர் இல்லை. பெண்களுக்கென தனி மருத் துவர் இல்லை. தற்போது வரும் நோயா ளிகளுக்கேற்ப குறைந்தபட்சம் 10 மருத்துவரையாவது நியமிக்க வேண் டும். கட்டிட வசதி இருந்தும் மருத்துவர் கள் இல்லை. செவிலியர்கள் 5 பேர் தான் உள்ளனர். உதவியாளர்கள் இல்லாத தால், ஓய்வு பெற்றவர்களை பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். எனவே, இந்த மருத்துவமனைக்கு கூடுதல் மருத்துவர் களை நியமிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.</p>
