மருத்துவர்கள் பற்றாக்குறையால் கோவைக்கு அனுப்பப்படும் நோயாளிகள் நீலகிரி மக்களின் நீண்ட நாள் கனவு பயனில்லாமல் போகும் அவலம்!
23 Nov 2025, 6:20 pm
<p><strong>மருத்துவர்கள் பற்றாக்குறையால் கோவைக்கு அனுப்பப்படும் நோயாளிகள் நீலகிரி மக்களின் நீண்ட நாள் கனவு பயனில்லாமல் போகும் அவலம்!</strong></p>
<p>உதகை அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் மருத்துவர் கள், பணியாளர்கள் பற்றாக்குறையால் நோயாளிகள் உயர்தர சிகிச்சை பெற முடியாமல் தவிப்புக்குள்ளாகி வருகின்ற னர். நீலகிரி மாவட்ட மக்களின் பல ஆண்டு கோரிக்கையான அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, 480 கோடி ரூபாய் மதிப் பீட்டில் கட்டப்பட்டு செயல்பட்டு வருகிறது. மருத்துவமனை மருத்துவக்கல்லூரியில் உடற்கூறு பிரிவு, உடலியல் பிரிவு, நோயி யல் பிரிவு, அவசர சிகிச்சை பிரிவு, அறு வை சிகிச்சை அரங்கு, மயக்கவியல், உயர் தொழில் நுட்ப பரிசோதனை மையம் உள் ளிட்ட பல்வேறு பிரிவுகள் செயல்பட்டு வருகி றது. புதிய மருத்துவமனை திறப்புக்கு பின், தினமும் மாவட்டம் முழுவதும் இருந்து, 800 -க்கும் மேற்பட்டவர்கள் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். உள்நோயாளிகளாக சிகிச்சை பெற தேவையான படுக்கை வசதி கள் உள்ளன. பழங்குடியின மக்களுக்கு, 50 படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள் ளது. மருத்துவர்கள் பற்றாக்குறை மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவ மனையில் அனைத்து பிரிவுகளிளும் 460 பேர் பணியில் இருக்க வேண்டும். தற்போது 300 பேர் மட்டுமே பல்வேறு பிரிவுகளில் பணி புரிந்து வருகின்றனர். குறிப்பாக, முக்கிய துறைகளில் மருத்துவர்கள், பணியாளர்கள் பற்றாக்குறை குறித்து அதிகாரிகள் எந்த தகவலையும் தெரிவிப்பதில்லை. சிகிச் சைக்கு வரும் நோயாளிகள் உயிர் பயத்தில் வெளிமாவட்டத்துக்கு சிகிச்சைக்கு செல் கின்றனர். இதுபோன்ற காரணங்களால் ஏழை, எளிய மக்கள் கடுமையாக பாதிக்கப் பட்டுள்ளனர். இதற்கிடையே, குறைவான எண்ணிக்கையில் மருத்துவர்களை வைத்து அரசு மருத்துவக்கல்லூரிகள் நடத்தி வரும் நிலையில், மருத்துவர்கள் பணி யிடங்களில் ஆட்குறைப்பு செய்து வருவது பணியில் உள்ள மருத்துவர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இத னால், நோயாளிகள் அதிகம் பாதிக்கப்படு கின்றனர். செல்லும் வழியிலேயே உயிரிழப்பு தமிழக அரசு பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு, தற்போது மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவர் பணியிடங்களில் ஆட்குறைப்பு செய்யும் நடவடிக்கையை உடனடியாக கைவிட வேண்டும். இனி மேல் புதியதாக மருத்துவமனைகள் உரு வாக்கப்பட்டால், அதற்குரிய மருத்துவர் கள் மற்றும் பணியாளர்கள் பணியிடங்கள் உருவாக்கப்பட்ட பின்னரே அந்த மருத்துவ மனைகள் உருவாக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. மேலும், நீலகிரி மக்களின் மருத்துவக்கல்லூரி மருத்துவ மனை என்ற கனவு நனவாகியும், உயர் தர சிகிச்சை பெற முடியாமல் மீண்டும் கோவை உட்பட வெளி மாவட்டத்திற்கு அனுப்பப்படும் நிலைக்கு மக்கள் தள்ளப் பட்டுள்ளனர். நீலகிரி மாவட்டத்தின் கூட லூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளிலிருந்து வரும் நோயாளிகள் மேல் சிகிச்சைக்காக கோவை செல்லும் சூழ்நிலை ஏற்படுகிறது. இதனால் பல நேரங்களில் செல்லும் வழியி லேயே உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன. அரசு இதனை கவனத்தில் எடுத்துக் கொண்டு கூடலூரில் செயல்படும் மருத்துவ மனையை உயிர் சிகிச்சை அளிக்கும் மருத் துவமனையாக விரைவில் செயல்படுத்த வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி யுள்ளனர். -ஷேக் அமீன், உதகை</p>
