பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் 119 ஆவது பிறந்தநாள் விழா : அமைச்சர்கள் மரியாதை ரூ.79.70 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கல்
30 Oct 2026, 9:37 pm

பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் 119 ஆவது பிறந்தநாள் விழா : அமைச்சர்கள் மரியாதை ரூ.79.70 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கல்

இராமநாதபுரம், அக்.30-பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர்அவர்களின் 119-வது பிறந்தநாள் விழா மற்றும் 64-வது குருபூஜை விழாவினையொட்டி, தமிழக அரசு சார்பில் எரிசக்தி-சட்டத்துறை அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல்குமார் , குறு, சிறு -நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் பெ.மதன்ராஜா, சுற்றுச்சூழல் - காலநிலை மாற்றத்துறை அமைச்சர் மரு.வே.க.ராஜீவ் ஆகியோர் வெள்ளிக்கிழமையன்று கமுதி வட்டம், பசும்பொன்னில் உள்ளஅவரது உருவச் சிலைக்கு மாலைஅணிவித்து மரியாதை செலுத்தினர். அதனைத்தொடர்ந்து பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் கலையரஙகத்தில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.

இதில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையின் மூலம் 26 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா ரூ.26,00,000 இலட்சம் மதிப்பீட்டிலும், 05 பயனாளிகளுக்கு உட்பிரிவு பட்டா மாறுதல்களும், 84 பயனாளிகளுக்கு புதிய குடும்ப அட்டைகளும், 10 பயனாளிகளுக்கு உழவர் அட்டைகளும், 03 பயனாளிகளுக்கு திருமண உதவித்தொகை ரூ.30,000 மதிப்பீட்டிலும், 03 பயனாளிகளுக்கு இறப்பு நிவாரணம் ரூ.60,000 மதிப்பீட்டிலும், மகளிர்மேம்பாட்டுத் திட்டம் மூலம் 05 பயனாளிகளுக்கு மகளிர் சுயஉதவிக்குழுக் கடன் ரூ.2,00,000 இலட்சம் மதிப்பீட்டிலும், வேளாண்மைத்துறையின் மூலம் 05 பயனாளிகளுக்கு தெளிப்பு நீர் பாசனம்ரூ.85,833 மதிப்பீட்டிலும், 05 பயனாளிகளுக்கு மழை தூதுவான் ரூ.1,94,217 இலட்சம் மதிப்பீட்டிலும், கூட்டுறவுத் துறையின் மூலம் 48 பயனாளிகளுக்கு மகளிர் சுய உதவிக்குழு கடன் திட்ட உதவி ரூ.48,00,000 இலட்சம் மதிப்பீட்டிலும் என மொத்தம் 194 பயனாளிகளுக்கு ரூ.79,70,050-இலட்சம் மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகளை அமைச்சர்கள் வழங்கினர்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சிவகுரு பிரபாகரன், சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கபாண்டி (மதுரை மேற்கு), எம்.எம்.கோபிசன் (மதுரை தெற்கு), எம்.வி.கருப்பையா (சோழவந்தான்), ஏ.குழந்தைராணி நாச்சியார் (சிவகங்கை), டி.இளங்கோவன் (மானாமதுரை), ஆர்.சீனிவாசசேதுபதி (திருப்பத்தூர்), மாவட்ட வருவாய் அலுவலர் வ.சங்கரநாராயணன் , கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) திவ்யான்ஷீநிகம் ,பரமக்குடி சார் ஆட்சியர் மரு.ச.வினோதினி , செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் .இ.சாலி தளபதி மற்றும் அரசுஅலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.