தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

தோழர் எஸ்.வேல்மாறன் மறைவு: சிபிஎம் இரங்கல்

18 Jul 2026, 9:51 pm
தோழர் எஸ்.வேல்மாறன் மறைவு: சிபிஎம் இரங்கல்

தோழர் எஸ்.வேல்மாறன் மறைவு: சிபிஎம் இரங்கல்

சென்னை, ஜூலை 18- தோழர் எஸ். வேல்மாறன் மறைவுக்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் நாடு மாநில செயற்குழு இரங்கல் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக, கட்சி யின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் விடுத்துள்ள இரங் கல் அறிக்கை வருமாறு: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் விழுப்புரம் மாவட் டச் செயற்குழு உறுப்பின ரும், முன்னாள் ஒன்றியக் கவுன்சிலரும், தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங் கத்தின் மாநிலத் தலைவரு மான தோழர் எஸ். வேல் மாறன் (58) அவர்களின் மறைவு பெரும் அதிர்ச்சியை யும், வேதனையையும் தரு கிறது. அவரது மறைவிற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது.

போராட்ட வாழ்க்கை!

தோழர் எஸ்.வேல் மாறன், தமது பள்ளி, கல் லூரி காலத்திலேயே இந்திய மாணவர் சங்கத்திலும், பின் னர் இந்திய ஜனநாயக வாலி பர் சங்கத்திலும் பணியாற்றி யவர். பின்னர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்த அவர், கட்சியின் தாலுகா செயலாளர், மாவட் டக் குழு உறுப்பினர், மாவ ட்ட செயற்குழு உறுப்பினர், கரும்பு விவசாயிகள் சங் கத்தின் மாநிலத் தலைவர் என பல பொறுப்புகளில் திறம்பட பணியாற்றியவர்.

மக்கள் பணி!

ஒன்றுபட்ட திருக்கோயி லூர் தாலுகா, தற்போதைய கண்டாச்சிபுரம் தாலுகா மற்றும் வீரபாண்டி ஊராட்சி ஆகிய பகுதிகளில் விவசா யிகள், விவசாயத் தொழிலா ளர்கள் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களின் நலன்களுக்காக பல்வேறு போராட்டங்களை முன்னின்று நடத்தியவர். ஒன்றியக் கவுன்சிலராக தேர்ந்தெடுக்கப்பட்டு அர்ப்ப ணிப்பு உணர்வுடன் பணி யாற்றியவர். அவருடைய இணையர் உமா மகேஸ்வரி கட்சியின் இடைக்குழு, மாவட்டக்குழு உறுப்பினராகவும் மற்றும் மாதர் சங்க மாவட்டச் செய லாளராகவும் பணியாற்றிய வர். தோழர் வேல்மாறன் குடும் பமே, கட்சிக் குடும்பமாக விளங் கியது. அவரது மறைவு மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஏற்பட்ட பேரிழப்பாகும். தோழர் எஸ். வேல்மாறன் மறைவால் துயருற்றிருக் கும் அவரது இணையர் தோழர் உமா மகேஸ்வரிக் கும், இரு மகன்களுக்கும், குடும்பத்தினருக்கும், விழுப் புரம் மாவட்ட தோழர்களுக் கும் கட்சியின் மாநில செயற்குழு தனது ஆறுதலை யும், அனுதாபத்தையும் தெரி வித்துக் கொள்கிறது. இவ்வாறு இரங்கல் அறிக் கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.