பேருந்து நிலையத்தில் குடிநீர் இல்லாமல் பயணிகள் அவதி
1 Mar 2026, 5:56 pm
<p><strong>பேருந்து நிலையத்தில் குடிநீர் இல்லாமல் பயணிகள் அவதி</strong></p>
<p>தருமபுரி, மார்ச் 1- திறந்து சில மாதங்களே ஆன பென் னாகரம் புதிய பேருந்து நிலையத்தில், குடிநீர் வசதியின்றி பயணிகள் அவதிக் குள்ளாகி வருகின்றனர். தருமபுரி மாவட்டம், பென்னாகரம் பேருந்து நிலையத்திற்கு தினசரி ஆயி ரக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர். ஒகேனக்கல் சுற்றுலாத் தலத்திற்கு செல்லும் பேருந்துகள், பென்னாகரம் பேருந்து நிலையம் வழி யாக செல்ல வேண்டும். பென்னாகரம் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த பொது மக்கள், விவசாயிகள் விளைவிக்கும் பொருட்களை விற்பனை செய்வதற்கு பென்னாகரம் பேருந்து நிலையத்திற்கு வந்து செல்ல வேண்டியுள்ளது. அது மட்டுமல்லாமல் தினந்தோறும் பள்ளி, கல்லூரி மாணவர்கள், அரசு ஊழி யர்கள் இங்கு வந்து செல்கின்றனர். கடந்த சில மாதங்களுக்கு முன் பென் னாகரம் புதிய பேருந்து நிலையம் கட்டப்பட்டு திறக்கப்பட்டது. தற்போது பேருந்து நிலையத்தில் குடிநீர் இல்லாத தால் பயணிகள் கடும் அவதிக்குள் ளாகி வருகின்றனர். கோடைக்காலம் தொடங்குவதற்கு முன்பே, ஒகேனக்கல் மற்றும் பென்னாகரம் சுற்றுவட்டாரப்பகு திகளில் வெயில் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது. தினந்தோறும் சுற்று லாப் பயணிகள் மற்றும் பொதுமக்கள், மாணவர்கள் பேருந்து நிலையத்திற்கு வருகின்றனர். திறந்து சில மாதங்களே ஆன நிலையில், பேருந்து நிலையத் தில் குடிநீர் இல்லாததால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, பேருந்து நிலையத்தில் குடிநீர் கிடைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பய ணிகள் வலியுறுத்தியுள்ளனர்.</p>
<p> </p>
