தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

ரயில்களில் 90 டிகிரி இருக்கைகளால் பயணிகள் அவதி

22 Mar 2026, 4:19 pm
ரயில்களில் 90 டிகிரி இருக்கைகளால் பயணிகள் அவதி
<p><strong>ரயில்களில் 90 டிகிரி இருக்கைகளால் பயணிகள் அவதி</strong></p> <p>கோவை, மார்ச் 22- கோவையிலிருந்து திருப்பதி மற்றும் &nbsp;மயிலாடுதுறை செல்லும் ரயில்களில் பொருத்தப்பட்டுள்ள 90 டிகிரி இருக்கைக ளால் பயணிகள் அவதியடைந்து வருகின்ற னர். கோவை - திருப்பதி செல்லும் இன்டர்சிட்டி &nbsp;எக்ஸ்பிரஸ் மற்றும் மயிலாடுதுறை செல் லும் ஜனசதாப்தி எக்ஸ்பிரஸ் ரயில்களில் புதிய எல்.சி.எச் இருக்கைகள் அமைக்கப் பட்டுள்ளது. ஏற்கனவே இருந்த இருக்கை கள் சற்று சாய்ந்த கோணத்தில் இருந்த நிலை யில், புதிய இருக்கைகள் 90 டிகிரி கோணத் தில் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த &nbsp;ரயில்களில் செல்லும் பயணிகள் கடுமையாக &nbsp;பாதிக்கப்பட்டுள்ளனர். உடனடியாக இந்த இருக்கைகளை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கைகளும் எழுந்துள்ளது. இதுகுறித்து போத்தனூர் ரயில் பயணி கள் சங்க பொதுச்செயலாளர் சுப்பிரமணியன் கூறுகையில், கோவையிலிருந்து திருப்ப திக்கு செல்லக்கூடிய இன்டர்சிட்டி எக்ஸ் பிரஸ் மற்றும் மயிலாடுதுறை செல்லக்கூடிய &nbsp;ஜனசதாப்தி எக்ஸ்பிரஸ் ஐசிஎப் பெட்டியில் இருந்தது. இதில் உள்ள இருக்கைகள் கொஞ்சம் சாய்ந்த கோணத்தில் இருக்கும். ஆனால் தற்போது வரக்கூடிய எல்.எச்.பி பெட்டியில் எல்லா இருக்கையுமே 90 டிகிரி யில் உள்ளது. அந்த இருக்கையில் உட் கார்ந்து நீண்ட தூரம் பயணம் செய்வதால் முதுகு வலி, இடுப்பு வலி ஏற்படுகிறது. குறிப் பாக வயதானோர் உட்கார்ந்து போகவே முடியவில்லை. அதனால் பழைய ஐசிஎப் பெட்டியில் எப்படி இருக்கை இருந்ததோ அதே மாதிரி இருக்கைகள் இந்த எல்எச்பி பெட்டியில் மாற்ற வேண்டும். அப்போது தான் மக்கள் பயணிக்க முடியும். திருப்பூர், ஈரோடு எல்லாம் ஒரு மணி நேரம், முக்கால் &nbsp;மணி நேரம் ஒன்றை மணி நேரத்துல போயிர லாம். அதுவே சிரமமாக இருக்கும் சூழலில் &nbsp;சென்னை வரைக்கும் பயணம் செய்வது &nbsp;சிரமம் மட்டுமல்லாமல், அந்த இருக்கையில் &nbsp;3 பேர் உட்காருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. &nbsp;எனவே, ரயில்வே நிர்வாகம் உரிய நடவ டிக்கை எடுக்க வேண்டும், என்றார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.