போதிய பேருந்துகள் இல்லாததால் பயணிகள் போராட்டம்
28 Dec 2025, 5:05 pm
<p><strong>போதிய பேருந்துகள் இல்லாததால் பயணிகள் போராட்டம்</strong></p>
<p>உதகை, டிச.28- உதகையில் அரசு போக்குவரத்துக் கழக பணிமனையிலிருந்து போதிய பேருந்துகள் இயக்கப்படாததால், வெகு நேரமாக காத்திருந்த பயணிகள் கடுங்குளிரில் போராட்டத்தில் ஈடுபட்ட னர். நீலகிரி மாவட்டம், உதகை அரசு போக்குவரத்துக் கழக பணிமனையிலி ருந்து உள்ளூர் மற்றும் வெளி மாவட்டங் களுக்கு 200க்கும் மேற்பட்ட அரசு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின் றன. இந்நிலையில், சனியன்று மாலை 5 மணி முதல் 8 மணி வரை கோத்தகிரி, கூடலூர், நஞ்சநாடு உள்ளிட்ட உதகை சுற்றுவட்டாரப்புற கிராமங்களுக்கும், ஈரோடு, திருப்பூர், மேட்டுப்பாளையம் உள்ளிட்ட வெளி மாவட்ட பகுதிக ளுக்கு போதிய பேருந்துகள் இயக்கப் படவில்லை. இதனால் பனியின் தாக் கத்தில் பயணிகள் கடும் அவதிக்குள்ளா கினர். வெகு நேரமாகியும் பேருந்துகள் இயக்கப்படாததால், ஆவேசமடைந்த பயணிகள் உதகை பேருந்து நிலை யத்தை முற்றுகையிட்டு, அங்கிருந்த பேருந்துகளை சிறைபிடித்து போராட் டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து பயணி கள் கூறுகையில், கர்நாடகா, கேரளம் பேருந்துகள் சரியான நேரங்களில் இயக்கப்பட்டு வருகின்றன. ஆனால், தமிழ்நாடு போக்குவரத்துக் கழகம் சார் பில் இயக்கப்படும் பேருந்துகள் சரி யான நேரங்களில் இயக்கப்படுவ தில்லை. மேலும், கிராமப்புற பேருந்து கள் சரியானபடி இயக்கப்படாததால், பள்ளி குழந்தைகள் மற்றும் வேலைக்கு செல்லும் பொதுமக்கள் மிகவும் பாதிப் படைந்து வருகின்றனர். எனவே, மாவட்ட நிர்வாகம் உடனடியாக சரி யான நேரங்களில் பேருந்துகளை இயக் குவதற்கான நடவடிக்கை எடுக்க வேண் டும், என்றனர்.</p>
