முந்தய பக்கம்

கீழ்வேளூர் தொகுதியில் பயணிகள் நிழல் குடைகள் திறப்பு

16 Feb 2026, 2:37 pm
கீழ்வேளூர் தொகுதியில் பயணிகள் நிழல் குடைகள் திறப்பு
<p><strong>கீழ்வேளூர் தொகுதியில் பயணிகள் நிழல் குடைகள் திறப்பு</strong></p> <p>நாகப்பட்டினம், பிப்.16- &nbsp;நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் தொகுதியில் 3 இடங்களில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து வெண்மணியில் ரூ.6,75,000, இரட்டைமதகடியில் ரூ.6,75,000, நீலப்பாடியில் ரூ.5,00,000 செலவில் அமைக்கப்பட்ட பயணிகள் நிழல் குடைகளை நாகப்பட்டினம் மாவட்ட திட்ட அலுவலர் ஸ்ருதி மற்றும் கீழ்வேளூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வி.பி.நாகைமாலி ஆகியோர் மக்கள் பயன்பாட்டுக்கு அர்ப்பணித்தனர். &nbsp;இந்த நிகழ்ச்சிகளில் கீழ்வேளூர் தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் பழனியப்பன், வடக்கு ஒன்றிய திமுக செயலாளர் பாண்டியன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கீழ்வேளூர் தெற்கு ஒன்றியச் செயலாளர் ஆர்.முத்தையன், ஒன்றிய குழுஉறுப்பினர் ஏ. சிவகுமார், முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் கே.செல்லமுத்து, கட்சியின் மூத்த உறுப்பினர் டி.சிங்காரவேல், கிளைச் செயலாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram