மாநகராட்சி உதவிபொறியாளர் ஐஏஎஸ் தேர்வில் தேர்ச்சி
12 Mar 2026, 4:20 pm
<p><strong>மாநகராட்சி உதவிபொறியாளர் ஐஏஎஸ் தேர்வில் தேர்ச்சி</strong></p>
<p>சென்னை மாநகராட்சி உதவிப் பொறியாளராக பணிபுரிந்து வரும் ஏ. பூஜா மற்றும் மடுவின்கரை சென்னை மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருபவரின் மகளான எம். கிருத்திகா ஆகிய இருவரும் அகில இந்திய குடிமைப் பணித் தேர்வில் வெற்றி பெற்றுள்ளதைத் தொடர்ந்து, இருவருக்கும் மேயர் பிரியா நினைவுப் பரிசு வழங்கிப் பாராட்டினார். இந்நிகழ்வில் துணை மேயர் மு.மகேஷ்குமார், மாநகராட்சி ஆணையாளர் ஜெ.குமரகுருபரன் ஆகியோர் பங்கேற்று வாழ்த்தினர்.</p>
