குடும்பத்தையும் நாட்டையும் உயர்த்தும் சக்தி கொண்டது கல்வி பள்ளி ஆண்டு விழாவில் பேரா.பர்வீன் சுல்தானா பேச்சு
22 Jul 2026, 9:36 pm
<p><strong>குடும்பத்தையும் நாட்டையும் உயர்த்தும் சக்தி கொண்டது கல்வி பள்ளி ஆண்டு விழாவில் பேரா.பர்வீன் சுல்தானா பேச்சு</strong></p><p>திண்டுக்கல், ஜூலை 22- திண்டுக்கல் புனித ஜோசப் சிபிஎஸ்சி பள்ளியின் 70-வது ஆண்டு விழா நடை பெற்றது. விழாவில் பேச்சா ளர் முனைவர் பர்வீன் சுல் தானா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உரை யாற்றினார். விழாவுக்கு திண்டுக்கல் மறைமாவட்ட விகார் ஜென ரல் ரெவரண்ட் ஃபாதர் சகாய ராஜ் தலைமை வகித்தார். விஜய் டிவி சூப்பர் சிங்கர் மற்றும் உதவி பேராசிரியர் டி.இர்வின் விக்டோரியா, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் டி.ஜான் பிரிட்டோ, அருட்சகோதரி ஃபாபி யோலோ ரிச்சி, பள்ளி முதல் வர் புனிதா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். விழாவில் பேசிய பேரா. பர்வீன் சுல்தானா, “இன் றைய குழந்தைகள் தொழில் நுட்ப அறிவில் மிகவும் முன்னேறிய தலைமுறை யாக உள்ளனர். அவர்களை சரியாக வழிநடத்துவதில் பெற்றோரின் பங்கு மிக வும் முக்கியமானது. ஒழுக் கம், கண்காணிப்பு மற்றும் நற்பண்புகளை சிறு வயதிலி ருந்தே குழந்தைகளுக்கு கற் பிக்க வேண்டும். இல்லை யெனில் நமது பண்பாடு, கலாச்சாரம் மற்றும் குடும்ப மதிப்புகள் பாதிக்கப்படும்” என்றார். மேலும், “கல்வி என்பது தேர்வில் மதிப்பெண் பெறுவ தற்கான கருவி மட்டுமல்ல; கற்றதை வாழ்க்கையில் நடைமுறைப்படுத்துவதற் கான சக்தியாகும். தோல்வி என்பது முடிவு அல்ல, அது வெற்றிக்கான பயிற்சிப் பட்டறை. கல்வி குடும்பத் தையும், சமூகத்தையும், நாட் டையும் உயர்த்தும் அற்புத மான வரம். ஒவ்வொருவரும் கல்வியை ஆயுதமாகக் கொண்டு முன்னேற வேண் டும். கல்வியின் வெளிச்சத்து டன் சிறகை விரித்து பறந் தால், உயர்ந்த இலக்கு களை எளிதில் அடைய முடி யும்” என்று அவர் வலி யுறுத்தினார்.</p>
