தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

பார்வதிபுரம்-கணியாகுளம் சாலையில் ரயில்வே கேட் பகுதியில் மேம்பாலம் அமைக்க மக்கள் கோரிக்கை

19 Jul 2026, 10:21 pm
பார்வதிபுரம்-கணியாகுளம் சாலையில்  ரயில்வே கேட் பகுதியில் மேம்பாலம் அமைக்க மக்கள் கோரிக்கை
<p><strong>பார்வதிபுரம்-கணியாகுளம் சாலையில் ரயில்வே கேட் பகுதியில் மேம்பாலம் அமைக்க மக்கள் கோரிக்கை</strong></p><p>நாகர்கோவில், ஜூலை 19- குமரி மாவட்டம் பார்வதிபுரத்திலிருந்து கணியாகுளம் செல்லும் சாலையில் உள்ள ரயில்வே கேட்டிற்கு மேம்பாலம் அமைத்திட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து கணியாகுளம் வட்டார மக்கள் மன்றம் தலைவர் மலைவிளை பாசி கூறியதாவது: பார்வதிபுரத்திலிருந்து கணியாகுளம் செல்லும் சாலையில் இரண்டு வழி ரயில்வே டிராக்குகள் உள்ளன. இதன் வழியாக அடிக்கடி பல ரயில்கள் சென்று வரு கின்றன. அதனால் அடிக்கடி அந்த ரயில்வே கேட் மூடப்படுகிறது. காலையில் மாலையில் அதிகப்படியாக ரயில்கள் செல்கின்றன. இந்நேரத்தில் வேலைக்கு செல்லும் மக்கள், பள்ளி கல்லூரிக்கு செல்லும் மாணவ மாணவிகள் ,பொது மக்கள், வியாபாரிகள் என பலரும் பாதிக்கப் படுகின்றனர். அதே சாலையில் நாகர்கோவிலில் இருந்து திருவனந்தபுரம் செல்வதற்காக நான்கு வழிச்சாலையும் அமைக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு மக்களுக்கு போக்கு வரத்துக்கு இடைஞ்சலாக இருக்கும் அந்த ரயில்வே கேட்டில் மேம்பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இது குறித்து குமரி மாவட்ட ஆட்சியர், தேசிய நெடுஞ்சாலை அதிகாரிகள், ரயில்வே பொது மேலாளர் ஆகியோரிடம் மனுக்களும் கொடுத்துள்ளோம். எனவே மக்கள் நலன் கருதி அங்கு மேம்பாலம் அமைத்திட வேண் டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.