மார்க் ஜுக்கர்பெர்க்கிற்கு 3 நாள் கெடு விதித்த நாடாளுமன்ற நிலைக்குழு
5 Aug 2026, 8:35 pm

மார்க் ஜுக்கர்பெர்க்கிற்கு 3 நாள் கெடு விதித்த நாடாளுமன்ற நிலைக்குழு

பிரதமர் மோடியின் முகநூல் காணொளி தற்காலிகமாக நீக்கப்பட்ட விவகாரத்தில், மெட்டா நிறுவனத்தின் (முகநூலின் தாய் நிருவனம்) தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க் மூன்று நாட்களுக்குள்மன்னிப்பு கோர வேண்டும் என்று நாடாளுமன்ற நிலைக்குழு கோரியுள்ளது.

இதுதொடர்பாக ஒன்றிய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் செயலாளருக்கு மக்களவை செயலகத்தின் இயக்குநர் ஏ.ஜோதிர்மயி எழுதிய கடிதத்தில்,“பிரதமர்மோடியின் வீடியோ நீக்கப்பட்ட விவகாரம் குறித்து தகவல் தொழில்நுட்பத்திற்கான நாடாளுமன்ற நிலைக்குழு ஆலோசனை நடத்தியது. இந்த ஆலோசனையின் போது மெட்டா தலைவர் மார்க்ஜுக்கர்பெர்க்கிடமிருந்து மன்னிப்பு கேட்கக் கோரி அவருக்கு கடிதம் (ஒன்றியமின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் அனுப்பும்) அனுப்ப வேண்டும் என நாடாளுமன்ற நிலைக்குழு

முடிவு எடுத்துள்ளது.

இந்தக் கடிதம் அனுப்பப்பட்ட 3 நாட்களுக்குள் அவர் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்கத் தவறினால், தகவல்தொழில்நுட்பச் சட்டம் பிரிவு 79(3)-இன் கீழ் வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பு/விலக்கு திரும்பப்பெறப்பட்டு, அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படலாம்” என்று கூறப்பட்டுள்ளது. தகவல் தொழில்நுட்பத்திற்கான நாடாளுமன்ற நிலைக்குழுவின் தலைவராக பாஜகவின் நிஷாந்த் துபே எம்.பி., உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.