தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

நீட், அயோத்தி விவகாரங்களை விவாதிக்க மோடி அரசு மறுப்பு! எதிர்க்கட்சிகள் போராட்டம்: ஸ்தம்பித்தது நாடாளுமன்றம்!

20 Jul 2026, 9:39 pm
நீட், அயோத்தி விவகாரங்களை விவாதிக்க மோடி அரசு மறுப்பு! எதிர்க்கட்சிகள் போராட்டம்: ஸ்தம்பித்தது நாடாளுமன்றம்!

நீட், அயோத்தி விவகாரங்களை விவாதிக்க மோடி அரசு மறுப்பு! எதிர்க்கட்சிகள் போராட்டம்: ஸ்தம்பித்தது நாடாளுமன்றம்!

புதுதில்லி நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடரின் முதல் நாளான திங்கட்கிழ மை (ஜூலை 20) அன்று, நாடாளு மன்றத்தின் இரு அவைகளும் கூடின. மக்க ளவையை சபாநாயகர் ஓம் பிர்லாவும், மாநிலங்க ளவையை அதன் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ண னும் வழிநடத்தினர். கூட்டம் துவங்கியதும், மறைந்த தலைவர்கள் மற்றும் முன்னாள் எம்.பி.க்களுக்கு இரங்கல் தெரி விக்கும் வகையில் இரு அவைகளிலும் இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டது. மேலும் இயற்கை பேரிடர்களால் கேரளம், உத்தரகண்ட் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் உயிரிழந்த மக்களுக்கும் இரு அவைகளிலும் அஞ்சலி செலுத்தும் வகையில் இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டது.

கூட்டம் துவங்கியதுமே, நீட் வினாத்தாள் கசிவு உள்ளிட்ட பிரச்சனைகளை அவையில் விவாதிக்க வேண்டுமென, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கோ ரிக்கை விடுத்தனர். முன்னதாக அவர்கள் ஒத்தி வைப்பு தீர்மானங்களையும் அளித்திருந்தனர். மாநிலங்களவையில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் உறுப்பினர் ஜான் பிரிட்டாஸ், ‘தேசிய கவுரவத்திற்கு அவமதிப்பு தடுப்பு (திருத்த) மசோதா - 2026’(வந்தே மாதரம்) அவையில் அறிமுகப்படுத்தப்படுவதை எதிர்த்து மாநிலங்களவை தலைவருக்கு விதி 67-ன் கீழ் நோட்டீஸ் அளித்திருந்தார்.

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா, அயோத்தி ராமர் கோவில் நன்கொடை முறைகேடு விவகாரம் குறித்து நோட்டீஸ் அளித்துள்ளார். சிபிஐ நாடாளுமன்ற உறுப்பினர் பி. சந்தோஷ் குமார், நீட் தேர்வு குளறுபடிகள் குறித்து விதி 267-ன் கீழ் நோட்டீஸ் அளித்திருந்தார். நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் ‘மேகதாது அணை விவகாரம்’ குறித்து விவா திக்க திமுக ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் அளித்தி ருந்தது. மக்களவையில் டி.ஆர்.

பாலுவும், மாநிலங்களவையில் திருச்சி சிவாவும் நோட்டீஸ் அளித்திருந்தனர். ஜந்தர் மந்தரில் அறவழியில் போராட்டம் நடத்தி வந்த சோனம் வாங்சுக், வலுக்கட்டாயமாக கைது செய்யப்பட்டது தொடர்பாக விவாதிக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள வை உறுப்பினர் சு. வெங்கடேசன் ஒத்திவைப்பு நோட்டீஸ் அளித்திருந்தார். ஆனால், இவை தொடர்பான எந்தவொரு விவாதத்திற்கும் சபாநாயகர் அனுமதி வழங்கப்படாத நிலையில், இடதுசாரிகள், காங்கிரஸ், சமாஜ்வாதி, திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர் கள் முழக்கங்களை எழுப்பினர். இதனால், மாநிலங்களவை நண்பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

அவை மீண்டும் மக்களவையில், எதிர்க்கட்சி களின் போராட்டத்திற்கு இடையிலேயே, 1956ஆம் ஆண்டின் உச்சநீதிமன்ற (நீதிபதிகள் எண்ணிக்கை) சட்டத்தை மேலும் திருத்துவதற்காக, 2026-ஆம் ஆண்டின் உச்சநீதிமன்ற (நீதிபதிகள் எண்ணிக்கை) திருத்த மசோதாவை ஒன்றிய இணையமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் மக்களவையில் அறிமுகப்படுத்தினார். இந்த அவசர சட்டத்தை பிரகடனப்படுத்துவதன் மூலம், சட்டங்களை உடனடியாக இயற்றுவதற்கு வழிவகுக்கும் என்றார்.

அதற்கான காரணங்களை காட்டும் விளக்க அறிக்கையையும் அவர் சமர்ப்பித்தார். இம்மசோதா, மே மாதம் பிறப்பிக்கப் பட்ட அவசரச் சட்டத்திற்கு பதிலாக கொண்டு வரப்பட்டுள்ளது என்றார். எனினும் எதிர்க்கட்சிக ளின் தொடர் முழக்கங்களால், அவையை நடத்த முடியாத சூழல் ஏற்பட்டது. இதனால் இரு அவைகளும் அடுத்தடுத்து ஒத்தி வைக்கப்பட்டன.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.