தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர்: சர்ச்சை மசோதாவை தாக்கல் செய்யும் பாஜக!

18 Jul 2026, 8:50 pm
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர்: சர்ச்சை மசோதாவை தாக்கல் செய்யும் பாஜக!
<p><strong> நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர்: சர்ச்சை மசோதாவை தாக்கல் செய்யும் பாஜக!</strong> </p><p>ஜூலை 20 திங்​கட்​கிழமை நாடாளுமன்ற மழைக்​கால கூட்​டத்​தொடர் துவங்​கி ஆகஸ்ட் 13 வரை நடைபெறுகிறது. இந்த கூட்டத்தொட ரில் வந்தே மாதரம் பாடலை அவம​தித்​தால் அல்​லது அதை தடுத்​தால் 3 ஆண்​டு​கள் வரை சிறை தண்டனை மற்​றும் அபராதம் வழங்க வகை செய்யும் புதிய மசோ​தாவை பாஜக அரசு தாக்​கல் செய்கிறது. அன்று உள்​துறை அமைச்​சர் அமித்ஷா இந்த மசோதா வை நாடாளு​மன்​றத்​தில் தாக்​கல் செய்​ய​ உள்ளதாக தகவல் வெளி​யாகி​யுள்​ளது. தற்போது கொண்டு வரப்படவுள்ள தேசிய கவுரவ அவம​திப்பு தடுப்பு சட்​டத் திருத்த மசோதா வுக்கு ஒன்றிய அமைச்​சரவை ஏற்கெனவே ஒப்​புதல் அளித்துள்ளது. இம்மசோதா சட்டமானால் வந்தே மாதரம் பாடலை அவமிப்பவர்களுக்கும் அதை பாடு​வதற்கு தடை ஏற்படுத்​து​வோருக்​கும் தண்​டனை வழங்​க வழிவகை செய்யும் என கூறப்படுகிறது. தேசிய கீத​மான ‘ஜன கண மன’ இசைக்​கப்​படும் அரசு நிகழ்ச்சிகளில், ‘வந்தே மாதரம்’ இசைக்கப்படுவதை அல்​லது பாடு​வதை கட்​டாய​மாக்கி ஒன்றிய உள்​துறை அமைச்​ச கம் ஏற்கெனவே சில வழி​காட்​டுதல்களை வெளியிட்டுள்ளது. அந்த வழிகாட்டுதல்கள் மூலம் வந்தே மாதரம் பாடலை பாஜக அரசு வலிந்து திணிக்கிறது என்ற குற்றச்சாட்டுகளும் எதிர்ப்புகளும் எழுந்துள்ளது. இந்நிலையில் தான் மீண்டும் அது தொடர்பான ஒரு சர்ச்சைக்குரிய மசோதாவை கொண்டு வருவதும் கடும் எதிர்ப்புக்குள்ளாகியுள்ளது. உச்சநீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்​கையை 33 இல் இருந்து 37 ஆக உயர்த்திய அவசர சட்டத்துக்கு ஒப்பு தலை பெறுவதற்கான சட்டத்திருத்த மசோதாவும் வரும் கூட்​டத்​தொடரில் தாக்கல் செய்யப்பட உள்​ளது. கடந்த கூட்​டத்​தொடரில் அறிமுகப்படுத்தப்பட்டு கடும் எதிர்ப்புகளுக்கு உள்ளான வெளி​நாட்டு நன்​கொடை ஒழுங்​கு​ முறை சட்​டத்திருத்த மசோ​தா, உயர் கல்வித் துறையை சீர மைக்கும் விக்​சித்​ ​பாரத்​ கல்​வி நிறுவன மசோ​தா ஆகிய​வை​யும்​ மக்​களவை​யில்​ பரிசீலனை மற்​றும்​ ஒப்​புதலுக்​​காகப் பட்டியலிடப்​பட்​டுள்​ளன.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.