முந்தய பக்கம்

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடக்கம்

19 Jul 2026, 9:03 pm
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடக்கம்
<p><strong>நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடக்கம்</strong></p><p>புதுதில்லி, ஜூலை 19: நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் திங்கள்கிழமை தொடங்கி ஆகஸ்ட் 13-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. மொத்தம் 19 அமர்வுகளைக் கொண்ட இக்கூட்டத்தொடர் குறித்து நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ அறிவித்துள்ளார். அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பேசிய அவர், முக்கியமான விவகாரங்கள் குறித்து விவாதிக்க அரசு தயாராக இருப்பதாகவும், அவையைச் சுமூகமாக நடத்த ஒத்துழைப்பு தருமாறு எதிர்க்கட்சிகளிடம் கோரியுள்ளார். நீட் வினாத்தாள் கசிவு, அயோத்தி ராமர் கோவில் நன்கொடை முறைகேடு, இந்திய மாலுமிகள் உயிரிழப்பு மற்றும் விலைவாசி உயர்வு போன்ற முக்கிய விவகாரங்களை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. இதனால் நடப்பு கூட்டத்தொடர் மிகுந்த அரசியல் பரபரப்புடன் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p>
Share
FacebookXWhatsAppTelegram