தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

தீக்கதிர் விரைவு செய்திகள்

12 Jul 2026, 9:14 pm
தீக்கதிர் விரைவு செய்திகள்

​​​​​​​ஜூலை 19 அனைத்துக் கட்சிக் கூட்டம்

2026ஆம் ஆண்டுக்கான நாடா ளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 20ஆம் தேதி தொடங்கி, ஆகஸ்ட் 13ஆம் தேதி வரை நடைபெறும் என நாடாளு மன்ற விவகாரங்களுக்கான துறை தெரி வித்துள்ளது. இந்த மழைக்கால கூட்டத் தொடரை கூட்டுவதற்கு ஜனாதிபதி திரவு பதி முர்முவும் ஒப்புதல் அளித்துள்ளார் என ஒன்றிய அமைச்சர் கிரண் ரிஜிஜூ வும் தெரிவித்துள்ளார். இந்நிலையில், நாடாளுமன்ற மழைக் கால கூட்டத் தொடரை முன்னிட்டு ஜூலை 19ஆம் தேதி காலை 11 மணிக்கு அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற உள்ளது என ஒன்றிய அரசு அறிவித் துள்ளது. இந்த கூட்டத் தொடரில் மகளிர் மற்றும் தொகுதி மறுவரையறை மசோதா மற்றும் 30 நாட்களுக்கு மேல் சிறையில் இருந்தால் தானாகவே முதலமைச்சர், பிரதமர் பதவி பறிபோகும் மசோதா உள்ளிட்டவற்றை நிறைவேற்ற ஒன்றிய அரசு தீவிரம் காட்டி வருவதாகக் கூறப் படுகிறது. இந்த மசோதாக்கள் அரசியல் அமை ப்பு மசோதாக்கள் என்பதால் இவற்றில் திருத்தம் மேற்கொள்ள மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை அவசியம். எனவே, நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது என தெரிகிறது. டாக்கா

வங்கதேசத்தில் கனமழை, நிலச்சரிவு 44 பேர் பலி - 10 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் பாதிப்பு

வங்கதேசத்தில் கடந்த சில நாட்க ளாக கனமழை பெய்து வரு கிறது. இந்த கனமழையினால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரி வில் சிக்கி இதுவரை 44 பேர் உயிரி ழந்துள்ளனர். சுமார் 10 லட்சத்திற்கும் அதி கமான மக்கள் கடுமையாக பாதிக்கப் பட்டுள்ளனர். சட்டோகிராம், காக்ஸ் பஜார், பண் டர்பன், ரங்கமதி, கக்ராச்சாரி, மௌல்வி பஜார் மற்றும் ஹபி்கஞ்ச் ஆகிய 7 மாவட்டங்களில் வெள்ளம் கடுமை யாகப் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த பகுதிகளில் மட்டும் சுமார் 2,67,918 குடும்பங்கள் வெள்ளத்தில் சிக்கி யுள்ளன. நாட்டின் பெரும்பாலான இடங்க ளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் 60% வங்கதேசம் இருளில் மூழ்கி யுள்ளது. சாலைகள் மற்றும் பாலங் கள் சேதமடைந்திருப்பது, தொலை தொடர்பு பாதிப்புகள் காரணமாக மீட்புப் பணிகள் மந்தமாக நடைபெற்று வருகின்றன. பல வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாலும், நிவாரண முகாம் கள் இல்லாததாலும் மக்கள் உணவின்றி தவித்து வருகின்றனர். ஒரே இடத்தில் 16 பேர் பலி காக்ஸ் பஜாரில் உள்ள ரோஹிங்கியா அகதிகள் முகாம்களில் ஏற்பட்ட நிலச்சரி வில் பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட 16 பேர் உயிரிழந்துள்ளனர். காக்ஸ் பஜார் நிலச்சரிவுக்கு சாதகமான இட மில்லை என்றாலும், அங்கு நிலச்சரிவு ஏற்பட்டு இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புனே “25% மழைநீர் தரையைத் தொடுவதற்கு முன்பே ஆவியாகிவிடுகிறது” நாட்டின் வடமேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய் யும் தென்மேற்கு பருவமழை யில், சுமார் 25% மழைநீர் தரையைத் தொடுவதற்கு முன்பே ஆவியாகி விடுகிறது என்ற புனே இந்திய வெப்ப மண்டல வானிலை ஆய்வு நிறுவனத்தின் (IITM) மூலம் அதிர்ச்சி தகவல்கள் வெளி யாகியுள்ளன. மேலும் அந்த அறிக்கையில், “தரை யைத் தொடும் மழைநீரை மட்டுமே இது வரை கணக்கில் கொண்டுள்ளோம். இப் போது ஆவியாகும் அந்த 25% தண்ணீரை முறையாகச் சேமிக்க வழிவகை செய் தால், நமது நீர் இருப்பு பெரும் அளவில் அதிகரிக்கும். இல்லையென்றால் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும்” என எச்ச ரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

“25% மழைநீர் தரையைத் தொடுவதற்கு முன்பே ஆவியாகிவிடுகிறது”

நாட்டின் வடமேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய் யும் தென்மேற்கு பருவமழை யில், சுமார் 25% மழைநீர் தரையைத் தொடுவதற்கு முன்பே ஆவியாகி விடுகிறது என்ற புனே இந்திய வெப்ப மண்டல வானிலை ஆய்வு நிறுவனத்தின் (IITM) மூலம் அதிர்ச்சி தகவல்கள் வெளி யாகியுள்ளன. மேலும் அந்த அறிக்கையில், “தரை யைத் தொடும் மழைநீரை மட்டுமே இது வரை கணக்கில் கொண்டுள்ளோம். இப் போது ஆவியாகும் அந்த 25% தண்ணீரை முறையாகச் சேமிக்க வழிவகை செய் தால், நமது நீர் இருப்பு பெரும் அளவில் அதிகரிக்கும். இல்லையென்றால் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும்” என எச்ச ரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.