முந்தய பக்கம்

நாடாளுமன்றத்தில் ஸ்மார்ட் கடிகாரத்திற்கு தடை

16 Jul 2026, 9:10 pm
நாடாளுமன்றத்தில் ஸ்மார்ட் கடிகாரத்திற்கு தடை
<p><strong>நாடாளுமன்றத்தில் ஸ்மார்ட் கடிகாரத்திற்கு தடை</strong></p><p>நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 20 முதல் ஆகஸ்ட் 13 வரை நடைபெறவுள்ளது. இந்தகூட்டத் தொட ரில் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவ டிக்கை என்ற பெயரில் நாடாளுமன் றத்திற்கு வரும் போது எம்.பி.,க்கள் ஸ்மார்ட் கடிகாரம் அணிவதை தவிர்க்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. இதுதொடர்பாக மக்களவை செயல கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஸ்மார்ட் கடிகாரம் (Smart Watch), ஸ்மார்ட் கண்ணாடிகள் (Smart Glasses) மற்றும் கேமரா பொருத்தப்பட்ட பேனாக்கள் (Camera Pens) போன்ற நவீன மின்னணு சாதனங்களை நாடாளுமன்றத்திற்குள் கொண்டு வர வேண்டாம். நாடாளு மன்றத்தின் பாதுகாப்பு, அங்கிருக்கும் ரகசியங்கள் மற்றும் உறுப்பினர்களின் தனிப்பட்ட உரிமைகளைப் பாதுகாப்ப தற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்த சாதனங்கள் மூலம் ரகசியமாகப் படம் பிடிக்கவோ அல்லது தகவல்க ளைப் பதிவு செய்யவோ வாய்ப்புள்ள தால், உறுப்பினர்களின் தனியுரிமைக்கு ஊறுவிளைவிக்கும் வகையில் இவை அமையும்” என அதில் கூறப்பட்டுள்ளது.</p>
Share
FacebookXWhatsAppTelegram