நாடாளுமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!
18 Apr 2026, 12:02 pm

தொகுதி மறுவரையறை மசோதா தோல்வியடைந்த நிலையில் நாடாளுமன்ற இரு அவைகளும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டன.

மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கையை தற்போதுள்ள 543-லிருந்து 850 ஆக உயர்த்தும் அரசியலமைப்பு (131ஆவது திருத்தம்) மசோதா 2026-ஐ தாக்கல் செய்வதற்காக, 33 சதவிகித மகளிர் இடஒதுக்கீட்டை அமல்படுத்தப் போவதாக கூறி ஏப்ரல் 16, 17, 18-ஆம் தேதிகளில் சிறப்பு அமரவை, மோடி அரசு கூட்டியது.

கடந்த 16-ஆம் தேதி மக்களவையில் 3 மசோதாக்களை அறிமுகம் செய்ய வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அப்போது, இதற்கு 251 எம்.பி-க்கள் ஆதரவாகவும், 185 எம்.பி-க்கள் எதிர்த்தும் வாக்களித்தனர். இதை தொடர்ந்து எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பை மீறி மகளிர் இடஒதுக்கீடு திருத்த மசோதா, தொகுதி மறுவரையறை மசோதா மற்றும் யூனியன் பிரதேச தொகுதி மறுவரையறை மசோதா ஆகிய 3 மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டன. மக்களவையில் 3 மசோதாக்கள் மீதான விவாதம் முடிந்து நேற்று மாலை 7.15 மணிக்கு வாக்கெடுப்பு நடைபெற்றது.

இதில், மொத்தம் 489 எம்.பி-க்கள் பங்கேற்ற டிவிஷன் வாக்கெடுப்பில் பங்கேற்றனர். இந்த மசோதாக்கள் வெற்றிப் பெற, டிவிஷன் வாக்கெடுப்பில் 326 வாக்குகள் (2/3 பங்கு) தேவை என்றிருந்த நிலையில், மசோதாவுக்கு ஆதரவாக 278 வாக்குகளும், எதிராக 211 வாக்குகள் பதிவாகின. இதன் மூலம் இந்த மசோதாக்கள் தோல்வியடைந்தன. இந்த நிலையில், இன்று நாடாளுமன்ற இரு அவைகளும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டன.