முந்தய பக்கம்

மறியலில் ஈடுபட்ட பூங்கா ஊழியர்கள் கைது

11 Mar 2026, 4:32 pm
மறியலில் ஈடுபட்ட பூங்கா ஊழியர்கள் கைது
<p><strong>மறியலில் ஈடுபட்ட பூங்கா ஊழியர்கள் கைது</strong></p> <p>உதகை, மார்ச் 11- தற்காலிக பணியாளர் களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக் கைகளை வலியுறுத்தி உத கையில் அரசு தாவரவியல் பூங்கா முன்பு மறியலில் ஈடு பட்ட பூங்கா ஊழியர்களை காவல் துறையினர் கைது செய்தனர். நீலகிரி மாவட்டத்தில் தோட்டக்கலைத்துறை கட் டுப்பாட்டில், 14 பண்ணைகள் மற்றும் பூங் காக்கள் உள்ளன. இந்த பூங்கா மற்றும் பண்ணைகளில் 800க்கும் அதிகமான தொழி லாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்க ளில் பெரும்பாலனவர்கள் கடந்த 25 ஆண்டுக ளுக்கு மேலாக பணியாற்றி வரும் நிலையில், 300 பேர் மட்டுமே நிரந்தர பணியாளர்களாக உள்ளனர். மீதமுள்ளவர்கள் தற்காலிக பணி யாளர்களாக பணியாற்றி வருகின்றனர். நிரந்தர பணியாளர்களுக்கு இபிஎப் உட்பட எந்த ஒரு சலுகைகளும் வழங்கப்பட வில்லை. மேலும், தோட்டக்கலைத்துறை யில் பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ள போதிலும், அதற்கு தற்காலிக பணி யாளர்களை கொண்டு நிரப்படாமல் உள்ளது. &nbsp;இவர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்கக் கோரி அரசாணை வெளியிட்ட போதிலும், &nbsp;இவர்களை பணி நிரந்தரம் செய்யாமல், அதி காரிகள் காலம் தாழ்த்தி வருவதாக கூறப்படு கிறது. இதனால், பல்வேறு இன்னல்களுக் குள்ளாகி வரும் தோட்டக்கலைத்துறை ஊழி யர்கள் கடந்த 4 நாட்களாக போராட்டத்தில் ஈடு பட்டு வருகின்றனர். இந்நிலையில், புதனன்று உதகை அரசு &nbsp;தாவரவியல் பூங்கா முன்பு பூங்கா சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல றிந்து வந்த போலீசார் போராட்டத்தில் ஈடு பட்ட தொழிலாளர்கள், ஊழியர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். ஆனால், அவர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட நிலை யில், 300க்கும் மேற்பட்டோரை காவல் துறையிகனர் கைது செய்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.</p>
Share
FacebookXWhatsAppTelegram