கோவில் மற்றம் தெருக்களில் கல்வி பயிலும் மாணவர்கள் அரசுப்பள்ளிக்கு கட்டிடம் கட்டித்தர பெற்றோர்கள் வலியுறுத்தல்
20 Nov 2025, 3:46 pm
<p><strong>கோவில் மற்றம் தெருக்களில் கல்வி பயிலும் மாணவர்கள் அரசுப்பள்ளிக்கு கட்டிடம் கட்டித்தர பெற்றோர்கள் வலியுறுத்தல்</strong></p>
<p>தருமபுரி, நவ.20- ஜோதிஅள்ளி கிராமத்தில் அரசு தொடக்கப்பள்ளி மற்றும் உயர்நிலைப் பள்ளியில் உரிய கட்டிட வசதி இல்லாத தால், கோவில் வளாகம் மற்றும் தெரு வில் வகுப்புகள் நடந்தும் அவல நிலை தொடர்கிறது. தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே உள்ள பி.செட்டிஹள்ளி ஊராட்சிக்குட்பட்ட ஜோதிஹள்ளி கிரா மத்தில், கடந்த 2017 ஆம் ஆண்டு வரை, 4 வகுப்பறைகளுடன் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வந்தது. 2016 ஆம் ஆண்டில் மாணவர்களின் நலன் கருதி, அரசு உயர்நிலைப்பள்ளி யாக தரம் உயர்த்தப்பட்டது. அதைத் தொடர்ந்து தொடக்கப்பள்ளி மற்றும் உயர்நிலைப்பள்ளி தனித்தனியாக செயல்பட தொடங்கியது. இதில், போது மான வகுப்பறை கட்டிடங்கள் இல்லா ததால், தொடக்கப்பள்ளிக்கு 2 வகுப் பறை, உயர்நிலைப்பள்ளிக்கு 2 வகுப் பறை என்ற நிலையில், தற்போது வரை பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்நிலை யில், தொடக்கப்பள்ளியில் 72 மாணவர் கள், உயர்நிலைப்பள்ளியில் 107 மாண வர்கள் படித்து வருகின்றனர். கடந்த 4 ஆண்டுகளாக தொடக்கப் பள்ளிக்கு 2 வகுப்பறை கட்டடம் மட்டும் உள்ளதால், மற்ற மூன்று வகுப்புகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு பள்ளியின் எதிரிலுள்ள மாரியம்மன் கோவில் வளா கத்தில் வகுப்புகள் நடத்தப்பட்டு வரு கின்றன. அதேபோல், உயர்நிலைப் பள்ளிக்கும் 2 வகுப்பறை கட்டிடம் மட் டுமே உள்ளதால், மற்ற வகுப்புகளை சேர்ந்த மாணவர்கள், வகுப்பறைக்கு முன்புள்ள வராண்டா மற்றம் பள்ளி முன்பு உள்ள தெருவில் மேஜை போடப் பட்டு அதில் அமர்ந்து படித்து வருகின்ற னர். பள்ளி தரம் உயர்த்தபட்ட நாளிலி ருந்து, தொடர்ந்து பள்ளிக்கு கூடுதல் கட்டிடம் வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் மற்றும் பெற்றோர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். பள்ளி அருகே அரசுக்கு சொந்தமான இடம் ஏதுமில்லாததால், கிராம மக் கள் சார்பில் இடம் தேர்வு செய்து கொடுக்க அறிவுறுத்தப்பட்டது. ஊர் பொதுமக்கள் கடந்த 2022 ஆம் ஆண்டு பள்ளிக்கு அருகே ஒரு ஏக்கர் நிலத்தை விலைக்கு வாங்கி பாலக்கோடு பிடிஒ பெயரில் பத்திரப்பதிவு செய்து ஒப் படைத்தனர். அதன்பிறகு, கட்டிடம் கட்ட வேண் டும் என மாவட்ட நிர்வாகம் உட்பட துறை சார்ந்த அதிகாரிகளிடம் அப்பகுதி மக் கள் மனு அளித்து வந்தனர். ஆனால், இதுவரை பள்ளிக்கு கட்டிடங்கள் கட்ட அனுமதி மற்றும் நிதி ஒதுக்கப்பட வில்லை. மேலும், கோவிலில் செயல்ப டும் 3 வகுப்பறைகளுக்கும் கரும்பல கைகள் வைப்பதற்கு கூட இடமில்லாத அவல நிலை உள்ளது. இதன் காரண மாக கோவில் வளாகத்தில் 3 வகுப்பறை களும், வராண்டா மற்றும் தெருவில் 3 வகுப்பறை என அரசுப்பள்ளி செயல்ப டும் அவல நிலை தொடர்கிறது. எனவே, அரசு அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து, அரசுப்பள்ளிக்கு கட்டிடம் கட் டித்தர வேண்டும் என பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் வலியுறுத்தியுள் ளனர்.</p>
