முந்தய பக்கம்

அரசுப்பள்ளிகளில் மாணவர்களை சேர்க்க பெற்றோர்கள் ஆர்வம்

13 May 2026, 11:04 pm
அரசுப்பள்ளிகளில் மாணவர்களை சேர்க்க பெற்றோர்கள் ஆர்வம்
<p><strong>அரசுப்பள்ளிகளில் மாணவர்களை சேர்க்க பெற்றோர்கள் ஆர்வம்</strong></p><p>மேட்டுப்பாளையம், மே 13- மேட்டுப்பாளையம் நகராட்சி பள்ளிகளில் மாணவர் சேர்க்கை துவங்கப்பட்டுள்ள நிலையில், அரசு பள்ளிகளில் சேர்க்க பெற்றோர்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை முடிந்து விரைவில் பள்ளிகள் திறக்கப் பட உள்ளன. இதனை முன்னிட்டு அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதன்ஒருபகுதியாக மேட்டுப்பாளையம் நக ராட்சி வள்ளுவர் நகரவை தொடக்கக்பள்ளியில் நடப்புக் கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை பணி துவங்கியது. இப்பள்ளி ”புதுமைப் பள்ளி” விருது பெற்ற பள்ளி ஆகும். இப்பள்ளியில் 400க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். இந்த ஆண்டு இப்பள்ளியில் 1 ஆம் வகுப்பில் சேரும் முதல் 50 மாணவர்களுக்கு 2 கிராம் வெள்ளி நாணயம், பல் வேறு பரிசுகள், அரசு வழங்கும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட உள்ளன. மேலும், இப்பள்ளியை நடுநிலை பள்ளி யாக தரம் உயர்த்த நகராட்சி நிர்வாகம், பள்ளிக்கல்வி துறை ஆகிய அரசுத்துறைகள் நடவடிக்கை மேற்கொண்டு வரு கின்றன. இத்தகைய பல்வேறு சிறப்பு அம்சங்களை கொண்ட இப்பள்ளியில் தங்களது மாணவர்களை சேர்க்க பெற் றோர்கள் ஆர்வம் காட்டி வருவதாக பள்ளி தலைமை ஆசிரியர் பேபி எஸ்தர் தெரிவித்துள்ளார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram