சேதமடைந்த பள்ளிக் கட்டடத்தை அகற்றக் கோரி பெற்றோர்கள் முற்றுகை
27 Feb 2026, 5:32 pm
<p><strong>சேதமடைந்த பள்ளிக் கட்டடத்தை அகற்றக் கோரி பெற்றோர்கள் முற்றுகை</strong></p>
<p>இராமநாதபுரம், பிப்.27 இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் பேரூராட்சி மையப் பகுதியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் 400க்கும் மேற்பட்ட மாணவ ,மாணவிகள் படித்து வருகின்றனர். பள்ளி யில் வகுப்பறை கட்டிடம் சேதம் அடைந்து ஆபத்தான நிலையில் உள்ளது. அந்த கட்டிடத்தை இடித்து,புதிய கட்டிடம் கட்டித்தரக் கோரி பலமுறை மனு அளித்தும் அதிகாரிகள் அலட்சியம் காட்டி வருவ தாக கூறி பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் வெள்ளியன்று பள்ளியை முற்றுகையிட்டு, போராட்டத்தில் ஈடுபட்டனர்.</p>
