முந்தய பக்கம்

பரங்கிப்பேட்டை: மாணவர்களுக்கான அறிவியல் எழுச்சிப் பிரச்சாரம்

11 Jul 2026, 10:38 pm
பரங்கிப்பேட்டை: மாணவர்களுக்கான அறிவியல் எழுச்சிப் பிரச்சாரம்
<p><strong>பரங்கிப்பேட்டை: மாணவர்களுக்கான அறிவியல் எழுச்சிப் பிரச்சாரம்</strong></p><p>பரங்கிப்பேட்டை,ஜூலை 11- பரங்கிப்பேட்டையில் இந்திய கிராமப்புற கல்வி ஏவுதள மையம் சார்பில், பள்ளி மாணவர்களுக்கான அறிவியல் தொடர் எழுச்சிப் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் ஸ்நாப் சர்க்கியூட் கருவியைப் பயன்படுத்தி, அன்றாட வாழ்வில் பயன்படும் அறிவியல் கண்டுபிடிப்புகள் மற்றும் அவற்றின் செயல்பாடுகள் குறித்து மாணவர்களுக்குச் செய்முறை விளக்கத்துடன் பயிற்சி அளிக்கப்பட்டது. அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் இருந்து ரோகன் சுரேஷ்கோபாலகிருஷ்ணன் காணொலி வாயி லாகக் கலந்து கொண்டு, அறிவியல் தொழில்நுட்பங்கள் குறித்து மாணவர்களிடம் உரையாற்றினார். மையத்தின் பொறுப்பாளர் சுந்தரமூர்த்தி நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார். மையத்தின் பொருளாளர் அன்புமணி மற்றும் கவிஞர் வடலூர் ஆதிரை ஆகியோர் மாணவர்களுடன் அறிவியல் குறித்துக் கலந்துரையாடினர். இந்த நிகழ்ச்சியில் 100-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் மிகுந்த ஆர்வத்துடன் பங்கேற்று, அறிவியல் சோத னைகளை நேரடியாகக் கற்றுப் பயனடைந்தனர். இப்பிரச்சாரமானது மாணவர்களிடையே அறிவியல் தேடலையும், தொழில்நுட்ப ஆர்வத்தையும் ஊக்குவிக்கும் வகையில் அமைந்தது.</p>
Share
FacebookXWhatsAppTelegram