தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

பரங்கிப்பேட்டை கடலில் ஹைட்ரோ கார்பன் கிணறுகள் அமைக்கும் திட்டம் அனைத்துக் கட்சி கூட்டத்தில் தொடர் போராட்டங்களுக்குத் தீர்மானம்

20 Jun 2026, 12:00 am
பரங்கிப்பேட்டை கடலில் ஹைட்ரோ கார்பன் கிணறுகள் அமைக்கும் திட்டம் அனைத்துக் கட்சி கூட்டத்தில் தொடர் போராட்டங்களுக்குத் தீர்மானம்
<p><strong>பரங்கிப்பேட்டை கடலில் ஹைட்ரோ கார்பன் கிணறுகள் அமைக்கும் திட்டம் அனைத்துக் கட்சி கூட்டத்தில் தொடர் போராட்டங்களுக்குத் தீர்மானம்</strong></p><p>சிதம்பரம், ஜூன் 19 சிதம்பரம் அருகே பரங்கிப்பேட்டை கடல் பகுதியில் புதிதாக 4 ஹைட்ரோ கார்பன் கிணறுகள் அமைக்கும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, பரங்கிப் பேட்டை ஒன்றியம் பி.முட்லூரில் அனைத்துக் கட்சிகள் மற்றும் அமைப்புகள் சார்பிலான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் எஸ்.ஜி. ரமேஷ்பாபு ஒருங்கி ணைத்தார். இதில் தி.மு.க. ஒன்றியச் செயலாளர் முத்து பெருமாள், அதிமுக ஒன்றியச் செயலாளர் ரங்கசாமி, சிபிஎம் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் பழ.வாஞ்சிநாதன், வி.சி.க. மாவட்டச் செயலாளர் தமிழ்வளவன், பா.ம.க. முன்னாள் மாவட்டச் செயலாளர் முருகன், விவ சாயிகள் சங்கத் தலைவர் ராமச்சந்திரன் ஆகியோர் கலந்து கொண்டு ஆலோ சனைகளை வழங்கினர். மேலும், மனிதநேய ஜனநாயகக் கட்சியின் மாநில துணைச் செயலாளர் ஹமீது ஜெகபர், மனித நேய மக்கள் கட்சித் தலை வர் அஸ்லாம், தேமு திக நிர்வாகி காந்தி, பரங்கிப் பேட்டை பேரூராட்சி கவுன்சிலர் அருள் முருகன், வர்த்தக சங்கத் தலைவர் ஷாலினி மரக்காயர், கட லோர மக்கள் வாழ்வு ரிமை இயக்கத்தின் ஒருங்கி ணைப்பாளர் சந்தானராஜ் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் சமூக அமைப்புகளின் நிர்வாகிகளும் பங்கேற்றுத் தங்களது கருத்துகளைப் பதிவு செய்தனர். கூட்டத்தில் நிறை வேற்றப்பட்ட முக்கியத் தீர்மானங்கள் கண்டன ஆர்ப்பாட்டம் ஹைட்ரோ கார்பன் திட்டத்தைக் கண்டித்து, வருகின்ற ஜூன் 23-ஆம் தேதி பரங்கிப்பேட்டை பேருந்து நிலையம் முன்பு அனைத்துக் கட்சிகள் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது. இத்திட்டத்திற்கு ஒட்டுமொத்த எதிர்ப்பைப் பதிவு செய்யும் வகையில், கிள்ளை மற்றும் பரங்கிப் பேட்டையில் முழு கடைய டைப்புப் போராட்டம் நடத்த வர்த்தக சங்கங்களிடம் கோரிக்கை விடுப்பது.கடலோர கிராமங்க ளில் வாழும் பொதுமக்களி டையே இத்திட்டத்தால் ஏற்படும் சுற்றுச்சூழல் மற்றும் வாழ்வாதாரப் பாதிப்புகள் குறித்து விரிவான விழிப்புணர்வுப் பிரச்சார இயக்கத்தை மேற்கொள்வது என கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. முடிவில், கூட்டத்தில் பங்கேற்ற அனைவருக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செய லாளர் ஏ.விஜய் நன்றி கூறினார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.