பரங்கிப்பேட்டை வெடி விபத்து பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் சிபிஎம் வலியுறுத்தல்
6 Jul 2026, 11:34 pm
<p><strong>பரங்கிப்பேட்டை வெடி விபத்து பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் சிபிஎம் வலியுறுத்தல்</strong></p><p>கடலூர், ஜூலை 6- பரங்கிப்பேட்டை வெடி விபத்தில் பாதிக் கப்பட்டவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கடலூர் மாவட்ட ஆட்சியரிடம் நேரில் மனு அளித்தனர். விபத்தின் பின்னணி கடலூர் மாவட்டம், பரங்கிப்பேட்டை தெற்கு ஒன்றியம் குச்சிப்பாளையம் கிராமத்தில் கடந்த ஜூன் 29-ம் தேதி கோயில் திருவிழா நடைபெற்றது. இதற்காக வாங்கி வைக்கப்பட்டிருந்த வெடிகள் திடீரென எதிர்பாராதவிதமாக வெடித்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சுமார் 20 பேர் பலத்த தீக்காயமடைந்தனர். அவர்கள் அனைவரும் தற்போது தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். பாதிக்கப்பட்டவர்களுக்கு உயர்தரச் சிகிச்சை அளிப்பதை உறுதி செய்யவும், தமிழக அரசின் முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து உரிய இழப்பீடு பெற்றுத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது. இது தொடர்பாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய செயலாளர் வழக்கறிஞர் ஜி.ஆழ்வார் தலைமையில், மாவட்டச் செயலாளர் கோ.மாதவன் மற்றும் கட்சி நிர்வாகிகள் அடங்கிய குழுவினர் கடலூர் மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து மனு அளித்தனர். மனுவைப் பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியர், இது குறித்து விரைந்து நட வடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். இந்நிகழ்வில் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் பழ.வாஞ்சிநாதன், ஆர்.அமர்நாத், ஒன்றிய குழு உறுப்பினர்கள் கே.திருஞானம், பி.கே.சுனில், ஏ.வினோபா, வார்டு உறுப்பினர் குமார் மற்றும் கிராமப் பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர்.</p>
