துர்நாற்றம் வீசும் குடிநீர்: நடவடிக்கை கோரி மனு
25 Sept 2026, 1:09 am

துர்நாற்றம் வீசும் குடிநீர்: நடவடிக்கை கோரி மனு

பரங்கிப்பேட்டை, செப்.24-பரங்கிப்பேட்டை தெற்கு ஒன்றியம், தில்லைவிடங்கன் ஊராட்சி, கீழச்சாவடி கிராமத்தில் ஊராட்சி நிர்வாகம் மூலம் வழங்கப்படும் குடிநீரில் அழுகிய முட்டை போன்ற துர்நாற்றம் வீசுவதாகவும், பல ஆண்டுகளாக இப்பிரச்சனை நீடித்து வருவதாக அப்பகுதி மக்கள் தெரி வித்துள்ளனர்.

குடிநீர் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண வலியுறுத்தியும், ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்தும் இந்திய ஜன

நாயக வாலிபர் சங்கம் சார்பில் பொது மக்களிடம் கையெழுத்து பெறப்பட்டு, பரங்கிப்பேட்டை ஊராட்சி ஒன்றிய அலு வலகத்தில் வட்டார வளர்ச்சி அலுவலரை சந்தித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்க பரங்கிப்பேட்டை தெற்கு ஒன்றிய தலைவர் டி. சதீஷ் தலைமையில் சிபிஎம் ஒன்றிய செயலாளர்கள் ஆழ்வார், விஜய், வாலிபர் சங்க ஒன்றிய செயலாளர் பாலமுரளி, ஒன்றிய பொருளாளர் ஜே. சிவலோகம், முன்னாள் வாலிபர் சங்க நிர்வாகி பி. சதீஷ்குமார், ஒன்றிய துணை செயலாளர் விஷ்ணு பாபு, உள்ளிட்டவர்கள் மனு அளித்தனர்.

மனுவை பெற்றுக்கொண்ட வட்டார வளர்ச்சி அலுவலர், குடிநீர் பிரச்சினைக்கு விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், அதுவரை தினந்தோறும் தண்ணீர் வண்டி மூலம் பொதுமக்களுக்கு குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதியளித்தார்.