பரந்தூர் திட்டத்தை இடமாற்ற தமிழக அரசு கோரவில்லை! மாநிலங்களவையில் ஒன்றிய அரசு தகவல்
21 Jul 2026, 9:59 pm
<p><strong>பரந்தூர் திட்டத்தை இடமாற்ற தமிழக அரசு கோரவில்லை! மாநிலங்களவையில் ஒன்றிய அரசு தகவல்</strong></p><p>சென்னை, ஜூலை 21 - சென்னையில் இரண்டாவது விமான நிலையம் அமைப்ப தற்காக முந்தைய திமுக அரசு காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரை தேர்வு செய்திருந்த நிலையில், தற்போதைய தவெக அரசு அந்த இடத்திற்கு மாற்றாக வேறு இடத்தில் விமான நிலையம் அமைக்க பரிசீலிப்பதாக தகவல் வெளியாகியிருந்தது. இந்நிலையில், பரந்தூரில் அமையவிருக்கும் பசுமை வழி விமான நிலையத்தின் இடத்தை மாற்றக் கோரி தமிழ்நாடு அரசு எந்த முன்மொழிவும் அளிக்க வில்லை என ஒன்றிய அரசு மாநி லங்களவையில் தெரிவித்து உள்ளது. திமுக உறுப்பினர் பி. வில்சன் எழுப்பிய கேள்விக்கு, சிவில் விமானப் போக்குவரத்துத் துறை இணையமைச்சர் முரளிதர் மோஹோல் பதிலளித்துள்ளார். அதில், விமான நிலையத்தை வேறு இடத்திற்கு மாற்றுமாறு மாநில அரசு எந்தக் கோரிக்கை யும் விடுக்கவில்லை எனத் தெரி வித்துள்ளார்.</p>
