முந்தய பக்கம்

பரம்பிக்குளம் - ஆழியாறு பாசனத்திட்ட தின விழா

8 Oct 2026, 2:28 am
பரம்பிக்குளம் - ஆழியாறு பாசனத்திட்ட தின விழா

பரம்பிக்குளம் - ஆழியாறு பாசனத்திட்ட தின விழா

பரம்பிக்குளம் - ஆழியாறு பாசனத்திட்ட தின விழாதலைவர்களின் உருவச்சிலைகளுக்கு அமைச்சர் மற்றும் மாவட்ட ஆட்சியர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

பரம்பிக்குளம் ஆழியாறு பாசனத்திட்ட தினத்தை முன்னிட்டு, இத்திட்டம் உருவாக காரணமான இருந்த தலைவர்களின் சிலைகளுக்கு மலர்தூவி மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. பொள்ளாச்சி நீர்வளத்துறை கண்காணிப்புப் பொறியாளர்அலுவலக வளாகத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், மாவட்ட ஆட்சியர்பவன்குமார் கிரியப்பனவர் உள்ளிட்டோர், முன்னாள் முதல்வர் கு.காமராசர், வி.கே.பழனிசாமி, சி.சுப்பிரமணியம், பொள்ளாச்சி நா.மகாலிங்கம் ஆகியோரின் சிலைகளுக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர். இந்நிகழ்வில், சார் ஆட்சியர் ராமகிருஷ்ண சாமி, பிஏபி கண்காணிப்பு பொறியாளர் கார்த்திகேயன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதன்பின் முள்னாள் அமைச்சர் மு.பெ.சாமிநாதன், கே.ஈஸ்வரசாமி எம்.பி., சட்டமன்ற உறுப்பினர்கள் கே.நித்தியானந்தம், ஜெயக்குமார் உள்ளிட்டோரும் தலைவர்களின் சிலைகளுக்கு மரியாதை செலுத்தினர். சோலையார் அணையில், திட்ட உருவாக்கத்தில் முக்கியப் பங்காற்றிய பத்மபூஷண் டாக்டர் கானூரி லக்ஷ்மண ராவ் சிலைக்கும் மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

Share
FacebookXWhatsAppTelegram