பரமக்குடியில் தமுஎகச விதை இலக்கிய சந்திப்பு
14 Jun 2026, 11:30 pm
<p><strong>பரமக்குடியில் தமுஎகச விதை இலக்கிய சந்திப்பு</strong></p><p>இராமநாதபுரம், ஜூன் 14- இராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி பொன்னையாபுரம் அருகே உள்ள பாரதி சிலம்பம் பயிற்சிப் பள்ளி கூட்டரங்கில், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலை ஞர்கள் சங்கம் பரமக்குடி கிளை சார்பில் இரண்டாவது விதை இலக்கிய சந்திப்பு நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கிளை துணைத் தலைவர் ஜான் கென்னடி தலைமை தாங்கினார். கிளைச் செயலாளர் க.ராமர் வரவேற்புரை யாற்றினார். மாவட்டத் தலைவர் மரு.இரா. ஆ.வான்தமிழ் இளம்பரிதி தொடக்க உரை யாற்றினார். மாவட்டச் செயலாளர் வா.ஸ்டா லின் மற்றும் மாவட்ட செயற்குழு உறுப்பி னர் த.முத்துலட்சுமி ஆகியோர் வாழ்த்துரை யாற்றினர். பள்ளி மாணவி கே.இனிதாவின் நடன நிகழ்ச்சியுடன் இலக்கிய சந்திப்பு தொடங்கி யது. தொடர்ந்து மா.செல்வி, மா.கென்னடி, க.சண்முகவேலு, எஸ்.கல்யாணி மற்றும் பள்ளி மாணவர்கள் ஷிவானி, ஆரத்யா, கீர்த்தி ஆகியோர் பாடல்கள் மூலம் நிகழ்ச்சிக்கு சிறப்புச் சேர்த்தனர். மேலும், ஷா.ரெஜினா பானு, செ.கண் மணி, பா.துர்கா தேவி மற்றும் கே.ஆர்.மைக் கேல் மாக்ஸி டயானா ஆகியோர் கவி தைகள் வாசித்து தங்களது கருத்துகளை பகிர்ந்து கொண்டனர். கிருஷ்ணன், கதை வடிவில் தனது கருத்துகளை முன்வைத்து பங்கேற்பாளர்களை சிந்திக்க வைத்தார். மாவட்டப் பொருளாளர் ந.ரேணுகா தேவி, கு.காந்தி எழுதிய “பேரலையின் சாட்சியம்” நூலை அறிமுகப்படுத்தினார். தொடர்ந்து “திரையிசைப் பாடல்களில் உள்ள புதையல்” என்ற தலைப்பில் க.ராமர் பாடல்களை மேற்கோள்காட்டி கருத்துரை யாற்றினார். இலக்கிய சந்திப்பில் பாரதி சிலம்பம் பயிற்சிப் பள்ளி மாணவர்களின் நடன மற் றும் பாடல் நிகழ்ச்சிகள் பார்வையாளர் களின் பாராட்டைப் பெற்றன. கிளைப் பொருளாளர் ந.ரேணுகாதேவி நன்றி கூறினார்.</p>
