சின்னாளப்பட்டி,ஜூன் 19- திண்டுக்கல் மாவட்டம்,திண்டுக்கல்-மதுரை தேசிய நான்கு வழிச்சாலையில் கொடைரோடு
19 Jun 2026, 10:26 pm
<p><strong>சின்னாளப்பட்டி,ஜூன் 19- திண்டுக்கல் மாவட்டம்,திண்டுக்கல்-மதுரை தேசிய நான்கு வழிச்சாலையில் கொடைரோடு </strong></p><p>இராமநாதபுரம் ஜூன் 19 தமிழ்நாடு முழுவதும் வியாழக்கிழமை அன்று வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை மேற்கொண்டனர். இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு உரிய வாகனங்களை சோதனை செய்யும் இடமான பரமக்குடி அரசு தொழிற்பயிற்சி நிலையம் வளாகத்தில், வட்டார போக்குவரத்து அலுவலகத்திலிருந்து தனியாக அமைந்துள்ள இடத்தில் திடீர் சோதனை நடத்தப்பட்டது. லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனைக்காக வந்ததை அறிந்த சில இடைத்தரகர்கள் அங்கிருந்து தப்பிச் செல்ல முயன்றனர். அவர்களை லஞ்ச ஒழிப்பு போலீசார் தடுத்து நிறுத்தி சோதனை மேற்கொண்டனர். மேலும், அச்சமயத்தில் அங்கிருந்த பொதுமக்கள் மற்றும் வாகன உரிமையாளர்களிடமும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு, அவர்களது விவரங்கள் சரிபார்க்கப்பட்ட பின்னர் மட்டுமே அங்கிருந்து செல்ல அனுமதிக்கப்பட்டனர். மேற்படி இடத்தில் பணியில் இருந்த மோட்டார் வாகன ஆய்வாளர் தங்கராஜ்,(59), வாகன ஓட்டுநர்கள் மற்றும் இடைத்தரகர்கள் ஆகியோரிடம் சோதனை மேற்கொண்டதில், கணக்கில் வராத பணம் ரூ.1,92,650 கண்டறியப்பட்டது. மேலும், இடைத்தரகர்களின் கைப்பேசிகளை சோதனை செய்ததில், வட்டார போக்குவரத்து அலுவலர் மற்றும் அவரது உறவினர்களின் வங்கி கணக்குகளுக்கு சுமார் ரூ.5,00,000 அளவிற்கு பணப் பரிமாற்றங்கள் நடைபெற்றிருப்பது கண்டறியப்பட்டது. இதனைத் தொடர்ந்து, மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்திலும் மற்றும் இரண்டு டிரைவிங் ஸ்கூல் அலுவலகங்களிலும் தொடர் சோதனை மற்றும் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. மேற்படி பணப் பரிமாற்றங்கள் தொடர்பாக லஞ்ச ஒழிப்பு போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.</p>
