முந்தய பக்கம்

பரமக்குடியில் ஓய்வூதியர் சங்க வட்டப் பேரவை

21 Jun 2026, 11:45 pm
பரமக்குடியில் ஓய்வூதியர் சங்க வட்டப் பேரவை
<p><strong>பரமக்குடியில் ஓய்வூதியர் சங்க வட்டப் பேரவை</strong></p><p><strong>​​​​​​​</strong>இராமநாதபுரம், ஜூன் 21- தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கத் தின் பரமக்குடி வட்டப் பேரவை கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. வட்டத் தலைவர் ஆர்.கிருஷ்ணமூர்த்தி தலைமை வகித்தார். வட்டச் செயலாளர் என்.எகியாதீன் வரவேற்றார். மாவட்ட இணைச் செயலாளர் பெ.சேகர் தொடக்க உரை யாற்றினார். கூட்டத்தில், வட்டச் செயலாளர் என்.எகியாதீன், பொரு ளாளர் கே.ஏ.கிருஷ்ணசாமி அறிக்கை சமர்ப்பித்தனர். மாவட்டத் தலைவர் கு.கிருஷ்ணன், மாவட்டச் செயலாளர் பி.எஸ்.விஜயராகவன், மாவட்டப் பொருளாளர் எஸ்.முருகேசன், மாநில செயற்குழு உறுப்பினர் கே.பிச்சை ஆகியோர் வாழ்த்துரையாற்றினர். மாவட்ட இணைச் செயலாளர் ஜி.கதிரேசன் நிறைவுரையாற்ற, எம்.எஸ்.பூமிநாதன் நன்றி கூறினார். பேரவையில் ஆர்.கிருஷ்ணமூர்த்தி தலைவராகவும், ஆர்.பன்னீர்செல்வம் செயலாளராகவும், எம்.எஸ்.பூமிநாதன் பொருளாளராகவும் தேர்வு செய்யப்பட்டனர். கூட்டத்தில், பரமக்குடி நகரில் வாடகைக் கட்ட டங்களில் இயங்கி வரும் அனைத்து அரசு அலுவல கங்களுக்கும் சொந்தக் கட்டடங்கள் அமைக்க நட வடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மா னங்கள் நிறைவேற்றப்பட்டன.</p>
Share
FacebookXWhatsAppTelegram