முந்தய பக்கம்

பரமக்குடியில் புத்தகத் திருவிழாவில் காகித மடிப்பு கலை பயிற்சி

16 Aug 2026, 9:51 pm
பரமக்குடியில் புத்தகத் திருவிழாவில் காகித மடிப்பு கலை பயிற்சி

பரமக்குடியில் புத்தகத் திருவிழாவில் காகித மடிப்பு கலை பயிற்சி

இராமநாதபுரம், ஆக.16-இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் ஞாயிற்றுக்கிழமை காகித மடிப்பு கலை பயிற்சியை பள்ளி மாணவ -மாணவியர்கள், பெற்றோர்கள், கல்லூரி மாணவர்கள் ஆசிரியர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர்.

அறிவியல் இயக்கத்தின் மேனாள் மாநில பொதுச் செயலாளர் அமலராஜன் பயிற்சி வழங்கினார். புத்தகத் திருவிழாவின் ஒருங்கிணைப்பாளர்கள் இந்த பயிற்சியினை ஒருங்கிணைத்தனர்.

அதேபோல சனிக்கிழமை மூன்று முதல் ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கு சுற்றுச்சூழல் கனவு வீடு என்ற தலைப்பிலும், ஆறு, ஏழு, எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்ற தலைப்பிலும், ஒன்பது, பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு போதை ஒழிப்பு என்ற தலைப்பிலும், 10, 11, 12 மாணவர்களுக்கு பண்பாடும் பாரம்பரியமும் என்ற தலைப்பிலும் ஓவியப் போட்டி நடைபெற்றது. அதில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு புத்தகத் திருவிழா அரங்கில் பரிசுகள் வழங்கப்பட்டன

போட்டிக்கான நடுவர்களாக ஓவிய ஆசிரியர்கள் கணேசன், ஜெய் கணேஷ், பாண்டி செல்வம், சாரதி ஆகியோர் வழிநடத்தினர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தமிழ்நாடு அறிவியல் இயக்கம் மற்றும் மக்கள் நூலகம் செய்திருந்தன.

Share
FacebookXWhatsAppTelegram