முந்தய பக்கம்

பரமக்குடி புத்தகத் திருவிழாவில் நூல் வெளியீடு

19 Aug 2026, 10:07 pm
பரமக்குடி புத்தகத் திருவிழாவில் நூல் வெளியீடு

பரமக்குடி புத்தகத் திருவிழாவில் நூல் வெளியீடு

இராமநாதபுரம், ஆக.19-மக்கள் நூலகமும், தமிழ் நாடு அறிவியல் இயக்கமும் இணைந்து இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் நடத்தி வரும் 4 ஆம் ஆண்டு புத்தகத் திருவிழாவின் 8 ஆம்நாள் நிகழ்வில், எழுத் தாளரும் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்டச் செயலாளருமான ஹ.அப் துல்நஜ்முதீன் எழுதிய பயணம் எனும் நூல் வெளியீட்டு விழா இ.கே.தட்சிணாமூர்த்தி தலைமையிலும், புத்தகத் திருவிழா ஒருங்கிணைப்பாளர்கள் முன்னாள் வட்டாட்சியர் சேகர், வழக்கறிஞர் பசுமலை, நல்லாசிரியர் சந்தியாகு, தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநில துணைத்தலைவர் எழுத்தாளர்கு.காந்தி, தி.ராஜா முன்னிலையிலும் நடைபெற்றது.

கல்விச் சிந்தனையாளர் பொதுப் பள்ளிக்கான மாநில மேடை பொதுச் செயலாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு நூலை வெளியிட்டு சிறப்புரையாற்றினார். நூலின் முதல் பிரதியை தொழிற்சங் கத் தலைவர் வி.காசிநாததுரை பெற்றுக் கொண்டார்.

நூலாசிரியர் ஹ.அப் துல்நஜ்முதீன் ஏற்புரையாற்றினார். இவ்விழாவில் முற்போக்குச் சிந்தனையாளர்கள், புத்தகத் திருவிழா ஒருங்கிணைப்பாளர்கள் ராஜேந்திரன், செல்வராஜ், கே.பி.ராமமூர்த்தி, செந்தில் ராமு,சிங்கராயர், அறிவியல் இயக்க மாவட்ட பொருளாளர் பாலமுருகன், தமுஎகச கிளை செயலர் ராமர், தொழிற்சங்க நிர்வாகிகள், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், பொதுமக்கள் மற் றும் வாசகர்கள் என பலரும் திரளாகக் கலந்து கொண்டனர்.

Share
FacebookXWhatsAppTelegram