முந்தய பக்கம்

பரமக்குடியில் புத்தகத் திருவிழா நிறைவு

1 hour before
பரமக்குடியில் புத்தகத் திருவிழா நிறைவு

பரமக்குடியில் புத்தகத் திருவிழா நிறைவு

பரமக்குடி, ஆக.21–இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் மற்றும் மக்கள் நூலகம் சார்பில் நடைபெற்ற 10 நாள் புத்தகத் திருவிழா நிறைவடைந்தது.ஆகஸ்ட் 11-ஆம் தேதி தொடங்கிய புத்தகத் திருவிழாவின் நிறைவு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது. வரவேற்புக் குழு துணைத் தலைவர் தி.ராஜா தலைமை வகித்தார். வரவேற்புக் குழுத் தலைவர் பெ.சேகர் தொடக்க உரையாற்றினார்.

நிகழ்ச்சியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் ரெ.குருவேல், தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநிலத் துணைத் தலைவர் கு.காந்தி, வரவேற்புக் குழுப் பொருளாளர் வே.ராஜேந்திரன், மக்கள் நூலகத் தலைவர் செ.சந்தியாகு, வின்சென்ட்ராஜா, சார்லஸ், வழக்குரைஞர் எஸ். சந்திரசேகர், பேராசிரியர் பைசுநிஷா, தட்சிணாமூர்த்தி, செல்வராஜ், வினோதினி உள்ளிட்டோர் வாழ்த்திப் பேசினர்.

வரவேற்புக் குழுச் செயலாளர் சி. பசுமலை நிறைவுரையாற்றினார். ஆசிரியர் மரிய ஆக்னஸ் நன்றி கூறினார்.

Share
FacebookXWhatsAppTelegram