ஆட்சியருக்கு அணிவகுப்பு மரியாதை
27 Jan 2026, 3:28 pm
<p><strong>ஆட்சியருக்கு அணிவகுப்பு மரியாதை</strong></p>
<p>தேனி, ஜன.27- தேனி மாவட்ட நிர்வாகம் சார்பில் 77-வது குடியரசு தினவிழா மாவட்ட விளை யாட்டு திடலில் நடைபெற் றது. ஆட்சியர் ரஞ்ஜீத்சிங் தேசியக் கொடியை ஏற்றி சமாதானத்தை வலியுறுத் தும் வகையில் வெள்ளைப் புறாக்கள் மற்றும் மூவர்ண பலூன்களை பறக்க விட் டார். தொடர்ந்து காவல்துறை படைப்பிரிவுகளின் அணி வகுப்பு மரியாதை நடை பெற்றது. சுதந்திர போராட்ட தியாகிகளின் வாரிசுதாரர் களுக்கு பொன்னாடை போர்த்தி கவுரவிக்கப்பட் டது. காவல்துறையில் சிறப் பாக பணியாற்றிய 84 காவ லர்களுக்கு முதலமைச்சரின் தங்கப் பதக்கங்கள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. பல்வேறு துறைகளில் இருந்தும் 80 பயனாளி களுக்கு ரூ.1.19 கோடி மதிப் பிலான நலத்திட்ட உதவிகள் சிறப்பாக பணியாற்றிய அரசு அலுவலர்களுக்கு நற்சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. மாவட்ட காவல் கண்கா ணிப்பாளர் சினேஹாப்ரியா, மாவட்ட வருவாய் அலு வலர் ராஜகுமார், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் தமிழரசி, சார் ஆட்சியர் ரஜத்பீடன், கூடுதல் காவல் கண்கா ணிப்பாளர் கலைக்கதிரவன் உட்பட பலர் கலந்து கொண் டனர்.</p>
