தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

விவசாயத்தை அழிக்கும் கல்குவாரியை மூடுக பாப்பாங்குளம் ஊர் மக்கள் ஆட்சியரிடம் மனு அளிப்பு

24 Sept 2026, 9:31 pm
விவசாயத்தை அழிக்கும் கல்குவாரியை மூடுக பாப்பாங்குளம் ஊர் மக்கள் ஆட்சியரிடம் மனு அளிப்பு

விவசாயத்தை அழிக்கும் கல்குவாரியை மூடுக பாப்பாங்குளம் ஊர் மக்கள் ஆட்சியரிடம் மனு அளிப்பு

திருநெல்வேலி,செப்.24-நெல்லை மாவட்டம் நாங்குநேரி சட்டமன்ற தொகுதியில் பாப்பான்குளம் அருகேதனியார் கல்குவாரி செயல்பட்டு வருகிறது, இதனால் சாலைகள் மோசமாகவும் விவசாயிகள் அழியும் தருவாயில்உள்ளது. எனவே கல்குவாரியை மூடக்த கோரி பாப்பாங்குளத்தில் ஊர் மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் அந்த ஊர் மக்கள் வியாழக்கிழமையன்று மாலை மாவட்ட ஆட்சியரை சந்தித்து கல்குவாரிசெயல்படுவதை தடுத்து நிறுத்தக் கோரி மனு கொடுத்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் ஊர்மக்கள் கூறியதாவது: பாப்பாங்குளத்தில் செயல்படும் கல்குவாரியால் விவசாயம் அழிகிறது/ நீர் நிலைகள் வறண்டுவிடுகின்றன. முக்கியமாக கூந்தன்குளம் பறவைகள் சரணாலயம் அழிந்து விடும்.தற்போதைய நிலவரப்படி அங்குள்ள பறவைகள் அருகில் உள்ள குளங்களுக்கு மாறுகிறது. மக்கள் போராட்டத்திற்கு பிறகு தற்காலிகமாக கல்குவாரிசெயல்படவில்லை. ஆனாலும் இது நிரந்தரம் இல்லை.கல்குவாரி செயல்பட்டால் இங்கு அழிவு ஏற்படும் சூழ்நிலை உள்ளது.எனவே இது குறித்து மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு கொடுத்துள்ளோம். மாவட்ட நிர்வாகமோ குழு அமைத்துவிசாரிப்போம் என்கிறது. இந்த குவாரியை நடத்துபவர் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை சேர்ந்த மாமல்லன் என்பவர் . த.வெ.க அரசு மக்களுக்கான அரசா அல்லது முதலாளிகளுக்கான அரசு என்பதை தெளிவுபடுத்த வேண்டும். கல் குவாரியை நிரந்தரமாக மூடாவிட்டால் உண்ணாவிரதம்,சாலை மறியல், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முற்றுகை போன்ற பல்வேறு போராட்டங்களில் ஈடுபடுவோம்.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.