வேலூரில் நீடித்த நீர் மேலாண்மை குறித்த மாநாட்டில் ஆய்வறிக்கைகள் சமர்ப்பிப்பு
22 Nov 2025, 4:26 pm
<p>வேலூர், நவ. 21– வேலூர் மாவட்டத்தில் உள்ள மாணவ, மாணவி களின் அறிவியல் ஆர்வ த்தை ஊக்குவிக்கும் வகை யில், தமிழ்நாடு அறிவியல் இயக்கம் மற்றும் இந்திய கணித அறிவியல் நிறு வனம், மாவட்டப் பள்ளிக் கல்வித்துறையுடன் இணைந்து ஏற்பாடு செய்த 34வது குழந்தை கள் அறிவியல் மாநாடு காட்பாடியில் நடைபெற்றது. இந்த ஆண்டு மாநாட்டின் மையக்கருத்தாக 'நீடித்த நிலையான நீர் மேலாண்மை (நீர் கல்வி)' என்ற தலைப்பு எடுக்கப் பட்டது. மாவட்டத் தலைவர் பே. அமுதா தலைமை தாங்க, பள்ளியின் தலை மையாசிரியர் எஸ். தார கேஸ்வரி முன்னிலை வகித்தார். மாவட்டச் செய லாளர் செ. நா. ஜனார்த்த னன் வரவேற்றுப் பேசி னார். வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலைக்கல்வி) பெ.செந்தில்குமார் மாநாட்டைத் தொடங்கி வைத்துப் பேசினார். தமிழ்நாடு அறிவியல் இயக்க மேனாள் மாநிலப் பொதுச்செயலாளர் எஸ்.சுப்பிரமணி சிறப்புரை யாற்றினார். இந்தக் கருத்தை மையமாகக் கொண்ட துணைத் தலைப்பு களில், வழி காட்டி ஆசிரி யர்களின் மேற்பார்வையில் மாணவ, மாணவிகள் ஆய்வு மேற்கொண்டு, மாவட்டம் முழுவதிலுமிருந்து மொத்தம் 56 ஆய்வறிக்கை களைச் சமர்ப்பித்தனர். இந்த மாநாட்டில் 120 மாணவர்கள் மற்றும் வழிகாட்டி ஆசிரியர்கள் பங்கேற்றனர். சமர்ப்பிக்கப் பட்ட ஆய்வுக் கட்டுரைகளில் சிறந்த 7 ஆய்வுக் கட்டு ரைகளும் மற்றும் வேலூர் மாவட்டத்தின் இளம் விஞ்ஞானிகளாக 14 மாணவர்களும் தேர்வு செய்யப்பட்டனர். இறுதி யாகக் காட்பாடி கிளைச் செயலாளர் ஆர். ராதா கிருஷ்ணன் நன்றி கூறினார்.</p>
