முந்தய பக்கம்

இனி காகித ரூபாய் நோட்டுகள் செல்லாது என்பது வதந்தி - ஒன்றிய அரசு விளக்கம்!

12 Jun 2026, 2:57 pm
இனி காகித ரூபாய் நோட்டுகள் செல்லாது என்பது வதந்தி - ஒன்றிய அரசு விளக்கம்!

நாம் தற்போது பயன்படுத்தும் ரூபாய் நோட்டுகள் செல்லாதது என பரவும் தகவல் குறித்து ஒன்றிய அரசு விளக்கம் அளித்துள்ளது.

காகித ரூபாய் நோட்டுகள் கிழிவதை தடுக்க ஒன்றிய அரசு பிளாஸ்டிக் நோட்டுகளை அறிமுகப்படுத்தபோவதாக செய்திகள் பரவி வருகின்றன. அதுமட்டுமில்லாமல் வருகின்ற ஜூன் 30ஆம் தேதி முதல் காகித ரூபாய் நோட்டுகள் செல்லாது எனவும் தகவல்கள் பரவி வருகின்றன.

இதுகுறித்து விளக்கமளித்த ஒன்றிய அரசு காகித ரூபாய் நோட்டுகள் செல்லாது என பரவும் தகவல் முற்றிலும் போலியானது அதை மக்கள் நம்பவேண்டாம் என தெரிவித்துள்ளது.

மேலும் இப்போதைக்கு பிளாஸ்டிக் நோட்டுகளை அறிமுகப்படுத்தும் திட்டம் தற்போது இல்லை எனவும் விளக்கமளித்துள்ளது.

இதனைத் தொடர்ந்து, ரிசர்வ் வங்கி தொடர்பான எந்தவொரு தகவலையும் அதிகாரபூர்வ இணையதளம் மூலம் சரிபார்த்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Share
FacebookXWhatsAppTelegram