தீக்கதிர் செய்தி எதிரொலி! வேகத் தடையில் வெள்ளை வர்ணம்
19 Jul 2026, 10:24 pm
<p><strong>தீக்கதிர் செய்தி எதிரொலி! வேகத் தடையில் வெள்ளை வர்ணம்</strong></p><p>பாபநாசம், ஜூலை 19- தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே, உத்தாணியில் கும்பகோணம் - தஞ்சாவூர் மெயின் சாலையில் வேகத் தடை உள்ளது. விபத்தை தவிர்ப்பதற்காக சமீபத்தில் இந்த வேகத் தடை அமைக்கப்பட்டது. இந்த வேகத் தடையில் வெள்ளை வர்ணம் இல்லாததால், இரவு நேரங்களில், வாகன ஓட்டிகள் தடுமாறி கீழே விழுந்து காயப்படுவதாகவும், இந்த வேகத் தடையில் எளிதில் அழியாத வகையில் வெள்ளை வர்ணம் அடிக்க வேண்டும் எனவும், வாகன ஓட்டிகள் விடுத்த கோரிக்கை தீக்கதிர் நாளிதழில் செய்தியாக வெளியானது. இதையடுத்து, வேகத் தடையில் வெள்ளை வர்ணம் அடிக்கப்பட்டது. செய்தி வெளியிட்ட தீக்கதிர் நாளிதழுக்கு வாகன ஓட்டிகள் நன்றி தெரிவித்தனர்.</p>
