பாபநாசம் சட்ட மன்றத் தொகுதி செயல் வீரர்கள் கூட்டம்
2 Apr 2026, 3:50 pm
<p><strong>பாபநாசம் சட்ட மன்றத் தொகுதி செயல் வீரர்கள் கூட்டம்</strong></p>
<p>பாபநாசம், ஏப். 2- தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் சட்ட மன்றத் தொகுதி செயல் வீரர்கள் கூட்டம் மதச் சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் நடைபெற்றது. பாபநாசம் அருகே, திருக்கருகாவூரில் நடைபெற்ற கூட்டத்திற்கு திமுக தஞ்சாவூர் வடக்கு மாவட்டப் பொறுப்பாளர் அன்பழகன் தலைமை வகித்தார். முன்னதாக அம்மாப்பேட்டை வடக்கு ஒன்றியச் செயலாளர் சுரேஷ் வரவேற்றார். இதில் நலிவுற்ற விவசாயிகள் சங்கம் இப்ராகிம், சிபிஐ மாவட்டச் செயலர் பாரதி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயற்குழு உறுப்பினர் மனோகரன், திமுக மாவட்ட துணைச் செயலாளர் அய்யாராசு, முன்னாள் எம்.எல்.ஏ ரெங்கசாமி, முஸ்லீம் லீக் எம்.பி. நவாஸ் கனி, பாபநாசம் சட்ட மன்றத் தொகுதி முஸ்லீம் லீக் வேட்பாளர் ஷாஜஹான் உள்ளிட்டோர் பேசினர். இதில் தி.க, காங்கிரஸ், மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள், மனித நேய ஜனநாயக கட்சி, தேமுதிக, தமிழர் தேசம் உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர். திமுக பாபநாசம் வடக்கு ஒன்றியச் செயலர் தாமரைச் செல்வன் நன்றி கூறினார்.</p>
