பாபநாசம் அணையில் 44.95அடி தண்ணீர் மட்டுமே இருப்பு
13 May 2026, 2:00 am

பாபநாசம் அணையில் 44.95அடி தண்ணீர் மட்டுமே இருப்பு

திருநெல்வேலி, மே 12- நெல்லை மாவட்ட அணைகளின் தற்போதைய நீர்மட்டம் வருமாறு- 143 அடி உச்ச நீர் மட்டம் கொண்ட பாபநாசம் அணையில் தற்போதுநீர் இருப்பு 44.95 அடி மட்டும் உள்ளது, 98.33 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது, 100 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வரு கிறது, 156 அடி உச்ச நீர்மட்டம் கொண்ட சேர்வலாறு அணையில் தற்போது நீர் இருப்பு வெறும் 57.81 அடி மட்டுமே உள்ளது. புதிதாக நீர் வரத்தும் இல்லை நீர் வெளியேற்றப்படுவதும் இல்லை.

118 அடி உச்சநீர் மட்டம் கொண்ட மணிமுத்தாறு அணையில் தற்போது நீர் இருப்பு 75.08 அடி மட்டுமே உள்ளது 72.77 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

245 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. களக்காட்டில் உள்ள வடக்கு பச்சையாறு அணையில் வெறும் 6 அடி மட்டுமே தண்ணீர் உள்ளது,

22.96 அடி உச்ச நீர் மட்டம் கொண்ட நம்பியார் அணையில் 14 அடி தண்ணீர் மட்டுமே இருப்பு உள்ளது. 52.50 அடி உச்சநீர் மட்டம் கொண்ட கொடுமுடியார் அணையில் நீர் இருப்பு தற்போது நான்கு அடி மட்டுமே உள்ளது.