பருத்தி மறைமுக ஏலம்
27 Jun 2026, 11:10 pm
<p><strong>பருத்தி மறைமுக ஏலம்</strong></p><p>பாபநாசம், ஜுன் 27- தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் ஒழுங்கு முறை விற்பனைக் கூடத்தில் பருத்தி மறைமுக ஏலம் நடந்தது. மின்னணு தேசிய வேளாண் சந்தை மூலம் நடந்த பருத்தி ஏலத்திற்கு ஒழுங்கு முறை விற்பனைக் கூட கண்காணிப்பாளர் சித்தார்த்தன் முன்னிலை வகித்தார். பாபநாசம், கபிஸ்தலம், உத்தமதானபுரம், மதகரம், மேல செம்மங்குடி, தேவராயன் பேட்டை உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 77 விவசாயிகள், 210 குவிண்டால் பருத்தியை எடுத்து வந்தனர். செம்பனார் கோவில், பண்ருட்டி, சேலம், கும்பகோணம், குடவாசல், வையச்சேரி, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 8 வணிகர்கள் பங்கேற்று, பருத்திக்கு அதிகபட்சம் ரூ.9,150, குறைந்தபட்சம் ரூ.8, 250, சராசரி ரூ.8,940 என விலை நிர்ணயித்தனர். பருத்தியின் மதிப்பு ரூ. 19 லட்சம்.</p>
