முந்தய பக்கம்

தஞ்சாவூர் - கும்பகோணம் இடையே உள்ள பாபநாசம்

7 Dec 2025, 3:52 pm
தஞ்சாவூர் - கும்பகோணம் இடையே உள்ள பாபநாசம்
<p>தஞ்சாவூர் - கும்பகோணம் இடையே உள்ள பாபநாசம் ரயில் நிலையம் அதிக போக்குவரத்து முக்கியத்துவம் உடையது. தினசரி ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயணிகள் பயன்படுத்தும் இந்த ரயில் நிலையத்திற்குச் செல்லும் சாலையோரம் திறந்தவெளி கழிப்பிடமாக உள்ளது. இதனால் பயணிகள் மூக்கை மூடியபடி செல்ல வேண்டியுள்ளது. சாலையின் இரு பக்கமும் சுமார் 2 ஏக்கர் பரப்பளவுள்ள, ரயில்வேக்கு சொந்தமான இடத்தில் சீமை கருவேல மரங்கள் உள்ளிட்ட செடி கொடிகள் மண்டி, மழை நீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாக வழி வகுக்கும் நிலையிலும், விஷ ஜந்துக்கள் வசிக்கக் கூடிய நிலையிலும் உள்ளது. ரயில்வே நிர்வாகம் இதில் கவனம் செலுத்த பயணிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram