தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

பிஏபி வாய்க்கால் உடைந்து தண்ணீர் வெளியேறியது!

22 May 2026, 11:45 pm
பிஏபி வாய்க்கால் உடைந்து தண்ணீர் வெளியேறியது!
<p><strong>பிஏபி வாய்க்கால் உடைந்து தண்ணீர் வெளியேறியது!</strong></p><p>கோவை, மே 22- விவசாயத் தேவைக்காக பிஏபி வாய்க்காலில் வெள்ளியன்று நீர் திறக்கப்பட்ட நிலையில், செஞ்சேரி மலை அருகே வாய்க்காலின் கரை திடீ ரென உடைந்து தண்ணீர் வெளியேறி யது. உடனடியாக அதிகாரிகள் சம் பந்தப்பட்ட இடத்திற்கு வந்து சரி செய் யும் பணியில் ஈடுபட்டனர். கோவை மற்றும் திருப்பூர் மாவட்ட விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம் படுத்தும் வகையில் பரம்பிக்குளம் ஆழி யாறு பாசனத் திட்டம் (பி.ஏ.பி) உரு வாக்கப்பட்டது. பல கிராமங்கள் வழி யாக பயணிக்கும் இந்த பாசன வாய்க் கால், பல்லாயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்களுக்கு நீர் ஆதாரமாக விளங்கி வருகிறது. இந்த ஆண்டும் விவசாயத் தேவைக்காக வெள்ளி யன்று நீர் திறக்கப்பட்டது. இந்நிலை யில், கோவை செஞ்சேரிமலை அருகே வாய்க்காலின் கரை திடீரென உடைந்து தண்ணீர் வெளியேறியது. இந்த உடைப்பால் பெருமளவு நீர் அருகிலுள்ள விவசாய நிலங்களில் புகுந்து வீணானது. இதுகுறித்து உடன டியாக பொதுப்பணித்துறை அதிகாரிக ளுக்கு விவசாயிகள் தகவல் தெரிவித்த னர். தகவலறிந்த அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, வாய்க்கா லில் வந்த தண்ணீரை மாற்று மதகுகள் வழியாகத் திருப்பிவிட்டனர். அதனைத் தொடர்ந்து, உடைந்த கரையின் ஒரு பகுதியை மண் கொட்டி தற்காலிகமாக சரிசெய்தனர். தற்போது, பாறாங்கற் களை பயன்படுத்தி கரையை வலுப்ப டுத்தும் பணியில் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். கடந்த நவம்பர் மாதம் வாவிபாளை யம் பகுதியில் இதேபோன்று வாய்க் கால் உடைப்பு ஏற்பட்டபோது, அதிகாரி கள் நடவடிக்கை எடுக்க தாமதமான தாக பொதுமக்கள் குற்றம் சாட்டியி ருந்தனர். ஆனால், இந்த முறை தகவல் கிடைத்த சில மணி நேரங்களிலேயே அதிகாரிகள் களமிறங்கி நடவடிக்கை எடுத்ததை விவசாயிகள் பாராட்டியுள் ளனர். இருப்பினும், இந்த வாய்க்கால் பல ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட் டதால் பல இடங்களில் சிதலமடைந்து காணப்படுகிறது. எனவே, இதுபோன்ற பாதிப்புகள் மீண்டும் ஏற்படாமல் இருக்க, பழமையான இந்த வாய்க் காலை போர்க்கால அடிப்படையில் சீர மைத்து, கரைகளை வலுப்படுத்த வேண் டும் என்று விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.