தீக்கதிர் முக்கிய செய்திகள்
19 Feb 2026, 3:09 pm

இந்தியாவின் கடன் ரூ. 214.82 லட்சம் கோடி நிதியமைச்சர் விளக்கம்

சென்னை, பிப். 19 - தமிழ்நாட்டின் கடன் அதிகரித்துள்ளதாக பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் பேசியதற்கு, சட்டப்பேரவையில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு பதிலடி கொடுத்துள்ளார். ஒன்றிய பாஜக அரசு பதவியேற்ற போது ரூ. 55 லட்சம் கோடி கடன் இருந்தது என்று நிதியமைச்சர் தெரிவித்தார். தற்போது அது ரூ.197.8 லட்சம் கோடியாக உள்ளது என்றும், 2027-இல் ரூ. 214.82 லட்சம் கோடி கடன் இருக்கும் என பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டினார்.

எஸ்.எஸ். ராஜகோபாலன் மறைவுக்கு சட்டமன்றம் இரங்கல்

சென்னை, பிப். 19 - தமிழ்நாடு சட்டப்பேரவை புதன்கிழமை (பிப். 18) அன்று காலை 9.30 மணிக்கு கூடியதும் சட்டமன்ற முன்னாள் உறுப்பினர்கள் மறைவு குறித்து இரங்கல் குறிப்பை சட்டப்பேரவைத் தலைவர் மு.அப்பாவு வாசித்தார். அப்போது, காங்கிரஸ், த.மா.க. சார்பில் அவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவரான ந. சுந்தரம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் தேர்ந்தெடுக் கப்பட்டவரான கு. லிங்கமுத்து ஆகியோரது மறைவுக்கும், மகாராஷ்டிரா மாநில துணை முதலமைச்சர் அஜித் பவர் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம் கொண்டுவரப்பட்டது. தமிழ்நாட்டின் மூத்த கல்வியாளர் எஸ்.எஸ். ராஜகோபாலன், பிப்ரவரி 3-ஆம் தேதி வயது முப்பு காரணமாக மரணமடைந்த நிலையில், அவரது மறைவுக்கும் தமிழ்நாடு சட்டப்பேரவையில் இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது. அரசுப் பள்ளி தலைமை ஆசிரியராக பணியாற்றிய ராஜகோபாலன் பல்வேறு வகையிலும் கல்வி வளர்ச்சிக்கு பாடுபட்டார். அதிலும் குறிப்பாக உயர்கல்வி துறையில் பல்வேறு சீர்திருத்தங்களை கொண்டுவர முக்கிய பங்கு வகித்தார். மேலும் சமச்சீர் கல்வியை உருவாக்கிய குழுவின் உறுப்பினராகவும் திறம்பட செயல்பட்டார். அத்துடன் தமிழ்நாட்டின் கல்வி மறுமலர்ச்சிக்கு வித்திட்டவர் எஸ்.எஸ். ராஜகோபாலன் என்று பேரவைத் தலை வர் அப்பாவு தெரிவித்தார். அதைத்தொடர்ந்து, உறுப்பி னர்கள் அனைவரும் இரண்டு மணித் துளிகள் அஞ்சலி செலுத்தினர்.

உதகையில் மல்டி லெவல் கார் பார்க்கிங்: அமைச்சர் உறுதி

சென்னை, பிப். 19 - உதகையில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருப்பதைக் கருத்தில் கொண்டு மல்டி லெவல் கார் பார்க்கிங் அமைத்துத் தர வேண்டும் என்று சட்டப்பேரவையில் காங்கிரஸ் உறுப்பினர் கோரிக்கை விடுத்தார். தேர்தல் நடத்தை விதிமுறைகளுக்கு முன்பாக அமைத்துத் தர வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். இதற்கு பதிலளித்த நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என். நேரு, சென்னை மற்றும் கோவையில் மல்டி லெவல் பார்க்கிங் அமைத்தும் சரியான பயன்பாடு இல்லை என்று தெரிவித்தார். உதகை, கொடைக்கானலுக்கு இது அவசியம் என்பதால், நிலத்தின் விலை அதிகமாக இருந்தாலும் உதகையில் மல்டி லெவல் பார்க்கிங் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதியளித்தார்.

அன்னதானத் திட்டம் விரிவாக்கம்

சென்னை, பிப். 19 - தமிழ்நாடு முழு வதும் இதுவரை 4,192 கோவில்களுக்கு குட முழுக்கு செய்யப் பட்டுள்ளதாக இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு சட்டப்பேர வையில் தெரிவித்தார். மேலும் 130 கோவில் களுக்கு ஓரிரு நாட்களில் குடமுழுக்கு நடத்தப் படும் என்றும் அவர் கூறினார். தமிழ்நாடு முழு வதும் அன்னதானத் திட்டம் விரிவுபடுத்தப் பட்டு தற்போது 12 கோவில்களில் தினசரி அன்னதானம் வழங்கப் பட்டு வருகிறது. ஆண்டு ஒன்றுக்கு சுமார் மூன்று கோடியே 50 லட்சம் பேர் பயனடைந்து வருவதாக வும், இதற்காக மட்டும் ரூபாய் 120 கோடி செலவு செய்யப்பட்டு உள்ளதாகவும் அமைச் சர் சேகர்பாபு குறிப்பிட் டார். ஒரு வேளை அன்ன தானத் திட்டம் மேலும் 27 கோவில்களுக்கு விரிவு படுத்தப்பட்டு இது வரை 40 லட்சம் பேர் பயனடைந்து உள்ளதாக வும் கூறிய அமைச்சர், வந்தவாசி தொகுதிக்கு உட்பட்ட தவளகிரி கோவில் கிரிவலப் பாதை சீரமைக்கப்படும் என்றும், மின்விளக்கு உள்ளிட்ட பல வசதி களும் செய்துதரப்படும் என்றார்.

புதிய கட்சி தொடங்கிய பண்ருட்டி ராமச்சந்திரன்

சென்னை, பிப். 19- பண்ருட்டி ராமச் சந்திரன் தனது 88 வய தில் எம்ஜிஆர் அண்ணா திராவிட முன்னேற்றக் கழ கம் என்ற புதிய கட்சியை தொடங்கியுள்ளார். முன்னாள் முதல் வர்கள் எம்ஜிஆர், கரு ணாநிதியின் அமைச்சர வையில் இருந்த பண்ரு ட்டி ராமச்சந்திரன், பாம கவுக்கு சென்றார். பின்னர், மக்கள் நலவுரிமைக் கழகம் என்ற கட்சியை தொட ங்கினார். அதைவிட்டு விட்டு, தேமுதிகவில் இணைந்தார். அங்கி ருந்து விலகி மீண்டும் அதிமுகவில் இணைந்த அவர், ஜெயலலிதா மறைவுக்கு பிறகு சசிகலா ஆதரவாளரா கவும், பின்னர் ஓ. பன்னீர்செல்வத்தின் ஆதரவாளராகவும் இருந்தார். தற்போது புதிய கட்சியைத் துவங்கியுள்ளார். சென்னையில் செய்தி யாளர்களுடன் பேசிய அவர், தமது கட்சி தேர்த லில் போட்டியிடாது என் றும், ஒத்த கருத்துடை யவர்களுக்கு தேர்த லில் ஆதரவு தெரிவிப் போம் என்றும் கூறினார். பிப்ரவரி 23 அன்று காஞ் சிபுரத்தில் கட்சியின் அறி முக விழா நடைபெறும் என்றும் தெரிவித்தார்.