பண்ருட்டியில் தீக்கதிர் சந்தா அளிப்பு
16 Jul 2026, 11:50 pm
<p><strong>பண்ருட்டியில் தீக்கதிர் சந்தா அளிப்பு </strong></p><p>பண்ருட்டியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ‘தீக்கதிர்’ நாளிதழுக்கான சந்தா திரட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் எஸ். கண்ணன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டு சந்தாக்களைப் பெற்றுக்கொண்டார். இந்நிகழ்ச்சியில், பண்ருட்டி வட்டம், பண்ருட்டி நகரம் மற்றும் நெல்லிக்குப்பம் கமிட்டி ஆகியவற்றின் சார்பில் மொத்தம் 19 சந்தாக்கள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் கோ. மாதவன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் வி. உதயகுமார், ஆர். ராமச்சந்திரன், மாவட்ட குழு உறுப்பினர் கிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலும், பண்ருட்டி வட்ட செயலாளர் எஸ்.கே. ஏழுமலை, நகர செயலாளர் தேவராஜுலு மற்றும் நெல்லிக்குப்பம் பகுதி செயலாளர் ஸ்டீபன் ராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.</p>
