பண்பொழி பகுதியில் யானைகள் அட்டகாசம் வனத்துறையினரின் கண்காணிப்பை அதிகரிக்க கோரிக்கை
5 Oct 2026, 9:27 pm

பண்பொழி பகுதியில் யானைகள் அட்டகாசம் வனத்துறையினரின் கண்காணிப்பை அதிகரிக்க கோரிக்கை

தென்காசி, அக். 5-தென்காசி மாவட்டம், செங்கோட்டை தாலுகா, பண்பொழி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இரவு நேரங்களில் யானைகள் குடியிருப்புப் பகுதிகள் மற்றும் விவசாய நிலங்களுக்குள் புகுந்து பயிர்கள்மற்றும் மரங்களை சேதப்படுத்தி வருவதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த 3.10.2026 அன்று இரவு பண்பொழி பகுதியில் புகுந்த யானைகள் வாழைமற்றும் தென்னை மரங்களை சாய்த்து சேதப்படுத்தியுள்ளன. இதனால் விவசாயிகள் பெரும் இழப்புக்கு உள்ளாகியுள்ளனர். எனவே, வனவிலங்குகளால் பயிர்சேதம் ஏற்படும் விவசாயிகளுக்கு உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதுடன், சேதமடைந்த பயிர்கள் மற்றும் மரங்களுக்கான இழப்பை முறையாக கணக்கிட்டு, மாவட்ட நிர்வாகம் உடனடியாக உரிய நிவாரணத் தொகையை வழங்க வேண்டும்.

மேலும், பண்பொழி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் யானைகள் தொடர்ந்து குடியிருப்புகள் மற்றும் விவசாய நிலங்களுக்குள் புகுவதைத் தடுக்க, வனத்துறை அதிகாரிகள் உரிய கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு, யானைகளை பாதுகாப்பான முறையில் வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனஅப்பகுதி மக்கள் வனத்துறை அதிகாரிகளுக்கு வேண்டுகோள் வைத்துள்ளனர்.