வட இந்தியாவில் தொழிலாளர் வர்க்கத்தின் போர்க்குணமிக்க எழுச்சி வேலைநிறுத்தம் முடிந்து இரு மாதங்களாகியும் தீர்க்கப்படாத கோரிக்கைகள்
22 May 2026, 9:03 pm

வட இந்தியாவில் தொழிலாளர் வர்க்கத்தின் போர்க்குணமிக்க எழுச்சி வேலைநிறுத்தம் முடிந்து இரு மாதங்களாகியும் தீர்க்கப்படாத கோரிக்கைகள்

எரிமலையாய் வெடிக்க காத்திருக்கும் பானிபட் தொழிலாளர்கள்

வேலைநிறுத்தம் 30

பானிபட், மே 22 - ஹரியானாவின் தொழில்சார் மண்ட லங்களில் கார்ப்பரேட் நிறுவனங்களின் சுரண்டல் முறைகளுக்கு எதிராகத் தொழிலாளர் வர்க்கம் முன்னெடுத்து வரும் தொடர் போராட்டங்களின் பகுதி யாக, பானிபட் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையின் ஒப்பந்தத் தொழிலாளர் களின் போராட்டம் நடந்தது. நாடு தழுவிய அளவில் பெரும் கவனத்தை ஈர்த்த இப்போராட்டம் முடிந்து இரண்டு மாதங்கள் கடந்துவிட்ட நிலை யிலும், தங்களின் அடிப்படைப் பிரச்ச னைகள் பல இன்னும் தீர்க்கப்படாமல் உள்ளதாகத் தொழிலாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர். இத்தொடரின் 30-ஆவது பகுதியில், பானிபட் ஆலைத் தொழிலாளர்களின் தற்போதைய கள நிலவரம் மற்றும் ஒப்பந்ததாரர்களின் சட்டவிரோதச் செயல்பாடுகள் குறித்து விரிவாகக் காண்போம். ஹரியானா மாநிலம் பானிபட்டில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை யில், ஒப்பந்தத் தொழிலாளர்கள் தங்க ளின் வாழ்வாதார உரிமைகளுக்காக நடத்திய தீரமிக்க போராட்டத்திற்குப் பிறகும், வேலை செய்யும் சூழலில் எவ்வித ஆக்கப்பூர்வமான மாற்றமும் ஏற்படவில்லை எனத் தொழிலாளர் தரப்பு தெரிவிக்கிறது.

நீடிக்கும் 12 மணி நேரச் சுரண்டல்

ஒப்பந்ததாரர்களால் தொழிலாளர் நலச் சட்டங்கள் திட்டமிட்டு மீறப்படு வதாகவும்—குறைந்த ஊதியம், சம்பளக் குறைப்பு, பாதுகாப்பற்ற பணிச்சூழல் மற்றும் கூடுதல் நேர ஊதியம் (Overtime) இன்றி கட்டாய மாக 12 மணி நேரம் வேலை வாங்கப்படு வதாகவும்—குற்றம் சாட்டி கடந்த பிப்ரவரி 23, 2026 அன்று தொழிலாளர் கள் மாபெரும் வேலைநிறுத்தப் போராட்டத்தைத் தொடங்கினர். தற்போது தொழிலாளர்கள் தரப்பில் எழுப்பப்படும் முக்கியக் குற்றச்சாட்டு என்னவெனில், இப்போரா ட்டத்திற்குப் பிறகு ஏற்பட்ட ஒரேயொரு மாற்றம்—ஒவ்வொரு மாதமும் 18 அல்லது 20-ஆம் தேதிகளில் வழங்கப் பட்டு வந்த ஊதியம், இப்போது மாதத்தின் 7-ஆம் தேதிக்குள் வழங்கப்ப டுகிறது என்பது மட்டும்தான். இதைத் தவிர நிர்வாகத்தின் உழைப்புச் சுரண்டல் வழக்கம் போலவே நீடிப்ப தாகத் தொழிலாளர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

சட்டப்படி வழங்கப்பட வேண்டிய இரட்டிப்பு விகிதத்திலான கூடுதல் நேர ஊதியம் இன்றி, தினமும் 12 மணி நேரம் வேலை வாங்கப்பட்டு, 8 மணி நேரத்திற்கான ஊதியம் மட்டுமே தற்போதும் வழங்கப்பட்டு வருகிறது. இது தவிர, தொழிலாளர்களின் ஊதி யத்தில் இருந்து இஎஸ்ஐ மற்றும் வருங்கால வைப்பு நிதி ஆகியவை வழக்கம்போலப் பிடித்தம் செய்யப் பட்டாலும், அதற்கான முறையான நிர்வாகப் பங்களிப்புத் தொகை இன்னும் செலுத்தப்படவில்லை. சுத்திகரிப்பு ஆலைக்குள் சுத்தமான குடிநீர், கழிவறைகள், அமருமிடம் மற்றும் போதிய பாதுகாப்பு உபகர ணங்கள் போன்ற அடிப்படை வசதிகள் கூட இன்னும் மேம்படுத்தப்படவில்லை எனத் தொழிலாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

தொழிலாளர்களின் குமுறல்களும் கள நிலவரமும்

இது குறித்து ஆலைத் தொழிலாளி பவன் குமார் கூறுகையில், “வேலை நிறுத்தத்திற்குப் பிறகு சம்பளம் 7-ஆம் தேதிக்குள் வருகிறது என்பது உண்மைதான். ஆனால், நாங்கள் இன்னும் 12 மணி நேரம் வேலை செய்துவிட்டு 8 மணி நேரத்திற்கான ஊதி யத்தைத்தான் பெறுகிறோம். மாதத் திற்கு 4 நாட்கள் விடுமுறையுடன் 26 நாட்கள் வேலை அட்டவணை தருவ தாகச் சொன்னார்கள், ஆனால் தற்போதும் 28 நாட்கள் வேலை செய்யக் கட்டாயப்படுத்தப்படுகிறோம்” என்றார்.

மற்றொரு உதவித் தொழிலாளி யான தில் சங்கர் பேசுகையில், “12 மணி நேர உழைப்பிற்கு எங்களுக்கு இன்னும் 18,000 ரூபாய்தான் கிடைக்கிறது. ‘பிரிவு அ’ (Category A) நகரங்களுக்கான ஒன்றிய அரசின் குறைந்தபட்ச ஊதிய விதியின்படி, 8 மணி நேர வேலைக்கு 20,358 ரூபாய் வழங்கப்படும் என்று பேச்சுவார்த்தையில் கூறப்பட்டது. ஆனால், களத்தில் நிலைமை அப்படியேதான் இருக்கிறது” எனத் தெரிவித்தார்.

தொழிலாளர் எழுச்சியின் முக்கியக் கட்டங்கள்

பானிபட் ஆலைத் தொழிலாளர் களின் உரிமைப் போராட்டம் பல்வேறு கட்டங்களைக் கடந்து வலுவடைந்தது:

• பிப்ரவரி 24, 2026: சிஐடியு மற்றும் இதர தொழிற்சங்கங்கள் தலையிட்டு, தொழிலாளர்களின் கூட்டத்தைக் கூட்டி ஆலை நிர்வாகத்திடம் எழுத்துப் பூர்வமான கோரிக்கை மனுவைச் சமர்ப்பித்தன.

•  பிப்ரவரி 26: சிஐடியு தலைவர்கள் ஜெய் பகவான் மற்றும் சுனில் தத் ஆகியோர் தலைமையில், பலத்த போலீஸ் பாதுகாப்பையும் மீறி தொழிலாளர்கள் நிர்வாக அலுவல கத்தை நோக்கிப் பேரணியாகச் சென்றனர். மாவட்ட நிர்வாகம் மற்றும் தொழிலாளர் நல அதிகாரிகளுடன் நடைபெற்ற 4 மணி நேரப் பேச்சு வார்த்தையில் ஊதிய உயர்வுத் திருத்தம் குறித்து இறுதி முடிவு எட்டப்பட வில்லை.

• பிப்ரவரி 27: தியாகி சந்திரசேகரின் நினைவு தினத்தை முன்னிட்டு தொழி லாளர்கள் மாபெரும் கூட்டத்தை ஒருங்கிணைத்தனர். அப்போது ஒப்பந்ததாரர்களின் ஆதரவாளர்கள் கூட்டத்தைக் கலைக்க முயன்ற போது தொழிலாளர்கள் ஒன்றிணைந்து முறியடித்தனர்.

• பிப்ரவரி 29: கடுமையான போலீஸ் நெருக்கடி மற்றும் வேலை நீக்க அச்சுறுத்தல் காரணமாகப் பெரும்பா லான தொழிலாளர்கள் பணிக்குத் திரும்பினர்.

• பிப்ரவரி 29: கடுமையான போலீஸ் நெருக்கடி மற்றும் வேலை நீக்க அச்சுறுத்தல் காரணமாகப் பெரும்பா லான தொழிலாளர்கள் பணிக்குத் திரும்பினர்.

நீறுபூத்த நெருப்பும்; காத்திருக்கும் எரிமலையும்

வேலைநிறுத்தம் தற்காலிகமாக முடிவுக்கு வந்த போதிலும், சிஐடியு ஹரியானா மாநிலக் குழு சார்பாகப் பானிபட் மற்றும் கர்னால் மாவட்டத் தொழிலாளர்களை ஒருங்கிணைத்து கூட்டுக் குழுக்கள் அமைக்கப்பட்டு, தொழிற்சங்க நடவடிக்கைகள் தொட ர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. மார்ச் 10 அன்று தொழிலாளர் உரிமை கள் குறித்த துண்டுப் பிரசுரங்கள் விநி யோகிக்கப்பட்டன; ஏப்ரல் 12 அன்று தொழிலாளர் குடியிருப்புகளில் விழிப்பு ணர்வுப் பிரச்சாரங்கள் மேற்கொள்ளப் பட்டன.

தற்போது சுத்திகரிப்பு ஆலை வெளியில் இருந்து பார்க்கும்போது இயல்பாக இயங்குவது போலத் தோன்றினாலும், தொழிலாளர்களின் அடிப்படைப் பிரச்சனைகளான குறைந்தபட்ச ஊதியம், கூடுதல் நேர ஊதியம் மற்றும் சமூகப் பாதுகாப்புப் பலன்கள் தீர்க்கப்படாததால், தொழிலாளர்கள் மத்தியில் அதிருப்தி நீறுபூத்த நெருப்பாகக் கனன்று கொண்டிருக்கிறது. இந்த கோரிக்கை கள் உடனடியாக நிறைவேற்றப்படாத பட்சத்தில், இந்த அமைதி தற்காலிக மானதாகவே இருக்கும் என்றும், தொழி லாளர்களின் வர்க்கக்கோபம் எதிர்கா லத்தில் எரிமலையாக வெடிக்கும் என்றும் தொழிலாளர் அமைப்புகள் எச்சரித்துள்ளன. லெப்ட் வியூஸ்